விஜய்யை சீண்டிய வைரமுத்து.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

Actor Vijay : சினிமாவில் பல வருடமாக பாடல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் வைரமுத்து. அவரைப் பற்றி நிறைய சர்ச்சையான விஷயங்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் விஜய்யை சீண்டி பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளதாக இசையமைப்பாளர் ஒருவர் கூறி இருக்கிறார்.

இப்போதெல்லாம் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் போட்டி நடிகர்களை விமர்சிக்கும் படியாக பாடல் வெளியாகி வருகிறது. அதன்படி லியோ படத்தில் ரஜினியை தாக்கியும், ஜெயிலர் படத்தில் விஜய்யை தாக்கியும் பாடல் வரிகள் இடம் பெற்று இருந்தது.

ஆனால் பல வருடங்கள் முன்பே அஜித்துக்காக விஜய் சீண்டிய பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருக்கிறார். அதை பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இசையமைப்பாளர் பரத்வாஜ் கொடுத்த பேட்டி

அஜித் நடிப்பில் உருவான காதல் மன்னன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் பரத்வாஜ். இதைத்தொடர்ந்து அஜித்துக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் அஜித்தின் அட்டகாசம் படத்திலும் பரத்வாஜ் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் உனக்கென்ன உனக்கென்ன என்ற ஒரு பாடல் இடம் பெறும். இதை விஜய்யை மனதில் வைத்துக் கொண்டுதான் பாடல் தயார் செய்தார்களாம்.

‘ஏற்றி விடவோ தந்தை இல்லை, ஏந்தி கொள்ள தாய்மடி இல்லை’ என்னை நானே சிகரத்தில் வைத்தேன் என அஜித்தை புகழ்ந்தும், விஜய் விமர்சித்து பாடல் வரிகள் இடம் பெற்றது. விஜய்யை குறிப்பிட்டு தான் இந்த பாடல் வரிகளை வைரமுத்து வைத்தார் என பரத்வாஜ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

அப்போது இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆன ஒன்று. இப்போது இது போன்ற பாடல்கள் நான் செய்தால் அவ்வளவுதான். ஏனென்றால் சோசியல் மீடியாவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் அதனால் நிறைய பிரச்சனை வரம் கூடும் எனக் கூறியிருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment