வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சம்பளத்தில் நயன் த்ரிஷாவை ஓரம் கட்டிய ஹீரோயின்.. ஃபெயிலியர் நடிகையாக இருந்தாலும் அம்மனி வேற ரகம்

Nayan and Trisha: சினிமாவில் காலங்காலமாக இரண்டு நடிகர்களுக்குள் நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு மோதிக் மோதிக் கொள்வது வழக்கம்தான். ஆனால் நடிகைகளில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப போட்டி போட்டுக் கொண்டு ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் த்ரிஷா மற்றும் நயன்தாரா தற்போது வரை அவர்களுடைய மார்க்கெட்டை அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அதில் த்ரிஷா தற்போது கமலுடன் சேர்ந்து தக் லைப் படத்தில் கூட்டணி வைத்ததன் மூலம் 12 கோடி சம்பளத்தை வாங்கி கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வருகிறார்.

இவரை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு நயன்தாரா பல தந்திரங்களை பண்ணி தற்போது 11 கோடி வரை சம்பளத்தை பெற்று வருகிறார். ஆனால் கமுக்கமாக இவர்கள் இருவரையும் ஓரம் கட்டும் அளவிற்கு சம்பளத்தில் முதலிடத்தில் இருக்கிறார் பெயிலியர் நடிகை ஒருவர்.

ஹீரோவை விட ஜாஸ்தியா சம்பளம் வாங்கிய நடிகை

தமிழில் விரல் விட்டு என்னும் அளவிற்கு மட்டும் தான் நடித்திருக்கிறார். ஆனால் பாலிவுட்டில் இவரை கொண்டாடும் அளவிற்கு பேரும் புகழையும் பெற்று விட்டார். அவர் வேறு யாருமில்லை கடந்த வருடம் சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத்.

இந்தப் படத்தை கேலியும் கிண்டலும் பண்ணும் அளவிற்கு மக்களிடம் மொக்கை வாங்கியது. அப்படிப்பட்ட இவருடைய நடிப்புக்கு அந்த படத்தில் லாரன்ஸை விட அதிகமாக தான் சம்பளம் வாங்கி இருக்கிறார். அதாவது லாரன்ஸ்க்கு 15 கோடி கங்கணாவுக்கு 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து தற்போது கமிட்டாகி இருக்கும் படங்களுக்கு 27 கோடி வரை சம்பளத்தை பேசி முடித்து இருக்கிறார். பொதுவாக எந்த ஹீரோயின்களுக்கு மார்க்கெட் அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்கு தான் சம்பளமும் அதிகமாக உண்டு.

ஆனால் இந்த அம்மணியை பொருத்தவரை பெருசா சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார். இதை தான் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுட்டு கொடுக்கவும் என்று சொல்வார்கள் போல.

Trending News