வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தினுசு தினுசாக பிரச்சனையை உண்டாக்கும் சூனியக்கார கிழவி.. ரண வேதனையில் தவிக்கும் பாக்யாவின் வாரிசு

Bhakiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவுக்கு எதிராக கோபியும் ராதிகாவும் சேர்ந்து ஹோட்டல் ஆரம்பித்து அதிகமாக கூட்டம் வர ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பாக்யாவின் ஹோட்டலுக்கு பெருசாக கூட்டம் வரவில்லை.

இதனால் பழனிச்சாமிடம் புலம்பித் தவித்த பாக்கியா, என்ன காரணமாக இருக்கும், ஏன் சாப்பிடுவதற்கு இங்கே வரவில்லை என்று எழிலுடன் சேர்ந்து ஒரு டிஸ்கசன் போய்க் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் தெரிய வருகிறது பாக்யாவின் ஹோட்டலில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் யாரும் இங்கே வர விரும்பவில்லை என்று.

உடனே பழனிச்சாமி இந்த பிரச்சினையை நான் சரி செய்கிறேன் என்று கொஞ்சம் பக்கத்தில் இருக்கும் இடத்தை பார்த்து அதற்கான ஓனரிடம் பேசி சுமுகமான ஒரு டீலிங் முடித்து விட்டார். இதை பாக்யாவிடம் சொல்லி இனி பார்க்கிங் பிரச்சினை வராது.

ஏனென்றால் பக்கத்தில் இருக்கும் இடத்தில் கார் பார்க்கிங் விடலாம். அதற்கான அனைத்து வேலையும் நான் செய்து விட்டேன். இனி ஹோட்டலில் சாப்பிடுவதற்கு கூட்டம் வரும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார். இதற்கிடையில் கோபி இருக்கும் ஹோட்டலில் செப் புது சாப்பாடு ரெடி பண்ணி டேஸ்டுக்கு கொடுக்கிறார்.

இதனை சாப்பிட்டு பார்த்த கோபி ஆகா ஓஹோ என்று பாராட்டுகிறார். உடனே ராதிகா, கோபியை தனியாக கூப்பிட்டு எப்போதுமே வேலை பார்ப்பவர்களிடம் கொஞ்சம் கண்டிப்புடன் தான் இருக்க வேண்டும். இதுதான் வியாபார யுக்தி என்று சொல்கிறார். உடனே கோபியும் இனி நானும் அப்படியே இருக்கிறேன் என்று தலையாட்டி விடுகிறார்.

மீண்டும் பிரச்சனை பண்ணும் பாக்யாவின் மாமி

பிறகு பாக்யாவின் வீட்டில் ஜெனி குழந்தையை பாக்கியவின் மாமியார் கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது எழிலின் மகளும் பாப்பாவை கொஞ்சுவதற்கு வருகிறார். ஆனால் பாக்யாவின் மாமியார் எழில் மகளை பக்கத்தில் அண்ட விடாமல் தள்ளி தள்ளி விடுகிறார். இதனை பார்த்த ராதிகா எழில் மகளுடன் விளையாண்டு நேரத்தை செலவழிக்கிறார்.

அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த எழில், பாப்பாவை கொஞ்சுகிறார். அப்பொழுது பாட்டி என்னை திட்டி விடுகிறார் என்று சொல்லியதும் எழில் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். அத்துடன் தற்போது பாட்டி இரண்டு குழந்தைகளுக்கு இடையே வேறுபாடு காட்டி பாசத்தை காட்டுகிறார் என்று எழிலுக்கு தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

இதனை பார்த்த எழில் மனது ரொம்பவே வேதனை பட்டு தவிக்கிறது. இன்னும் கோபியின் அம்மாவால் என்னென்ன பிரச்சனை எல்லாம் வர இருக்கிறது.

- Advertisement -

Trending News