திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

விஜயாவின் வீக்னஸ் பாயிண்ட்டில் கைவைத்த முத்து.. ரணகளத்தில் குதூகலமாக குளிர் காயும் சதிகாரி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், அமைதிக்கு பின் பூகம்பம் வெடிக்கும் என்பதற்கு ஏற்ப முத்து தாலி பெருக்கு நிகழ்ச்சியில் ரொம்பவே அமைதியாகவே இருந்தார். ஆனால் மனைவி மீது திருட்டுப்பழி வந்ததும் ஒரு கணவராக பொங்கி எழுந்து விட்டார்.

ஆனாலும் ஆரம்பத்தில் பொறுமையாகவே பதில் கொடுத்து வந்த முத்து, கடைசியில் வாசுதேவன் மீனாவை பார்த்து இந்த பொழப்புக்கு பிச்சை எடுத்து சம்பாதிக்கலாம் என்று சொன்னதும் முத்து கையை ஓங்கி விட்டார்.

இங்கே என்ன நடந்தது என்று தெரியாமல் உள்ளே நுழைந்த சுருதி அப்பா அடி வாங்கினதை பார்த்ததும் கோபப்பட்டு விட்டார். அத்துடன் ரவி வீட்டிற்கு என்னால் போக முடியாது என்று சொல்லி அம்மா அப்பா கூடவே போய்விட்டார். இதனால் ரவியும் எதுவும் பேச முடியாமல் பின்னாடியே போய்விட்டார்.

பிறகு வீட்டிற்கு வந்த விஜயா, இந்த முத்து இப்படி எல்லாம் பண்ணுவான் என்று தான் அந்த ஃபங்ஷனுக்கே வரவேண்டாம் என்று நான் சொன்னேன். ஆனால் நீங்க தான் அவனால் எந்த பிரச்சினையும் வராது என்று சொன்னீங்க.

இப்ப பார்த்தீங்களா எவ்வளவு பெரிய அவமானத்தை தேடி கொடுத்து விட்டான் என்று அண்ணாமலையிடம் புலம்ப ஆரம்பித்து விட்டார். போதாக்குறைக்கு கிடைத்த சான்சை மிஸ் பண்ண கூடாது என்று ரோகினியும் மனோஜும் முத்துவைப் பற்றி எந்த அளவுக்கு வத்தி வைக்க முடியுமோ அதை வீட்டில் இருப்பவர்களிடம் கொளுத்தி போட்டு விட்டார்கள்.

முத்து எடுத்த முடிவால் வாயடைத்துப் போன விஜயா

அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த முத்து மீனாவையும் பார்த்து விஜயா, இவங்க இருக்க வீட்டுல சுருதி வரமாட்டாள். அதனால் இவர்களை தனியாக போயி குடித்தனம் பண்ண சொல்லுங்க என்று விஜயா அண்ணாமலையிடம் சொல்லிவிட்டார்.

இதை கேட்டு கொஞ்சம் கூட கோபப்படாத முத்து, மீனாவை பார்த்து நம்ம துணி அனைத்தையும் எடுத்துட்டு வா போகலாம் என்று சொல்கிறார். அதே நேரத்தில் அப்பா நீங்களும் வாருங்கள் என்று அண்ணாமலையின் கையை பிடித்து கூப்பிடுகிறார்.

அண்ணாமலையும் முத்து கூப்பிட்டதும் எழுந்து போக ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த விஜயா நீங்க எங்க போறீங்க என்று கேட்க, என் பையன் எங்க கூப்பிடுறானோ அங்க தான் நான் போவேன் என்று சொல்லிவிட்டார். ஆக மொத்தத்தில் அண்ணாமலை இல்லாமல் விஜயாவால் இருக்க முடியாது.

எஸ்கேப் ஆன ரோகினி

அதனால் முத்துவும் மீனவும் தனி குடித்தனம் போக வாய்ப்பில்லை. ஆனால் இந்த சச்சரவுகள் நடக்கும் பொழுது ரோகிணி மட்டும் இப்படி ஒரு பிரச்சனையில் நம்மளை மறந்து விட்டார்கள் என்று குதூகலமாக சந்தோஷப்பட்டு வருகிறார். முத்துவை எப்படியாவது சிக்க வைத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று தான் பல சதிகளை பணி வந்தார் ரோகினி.

கடைசியில் ரோகினி எதிர்பார்த்தபடியே நடக்கிறது. ஆனால் முத்துவும் மீனாவும் வெளியே போக வாய்ப்பில்லை. பிறகு ரவியும் முத்து மீது இருக்கும் கோபத்தினால் சுருதியிடம் எதுவும் பேசாமல் அங்கேயே இருக்கப் போகிறார். ஆனால் சுருதிக்கு அவருடைய அப்பா அம்மாவின் உண்மையான சுயரூபம் தெரிந்தால் மட்டும் தான் இனி விஜயாவை தேடி புகுந்த வீட்டுக்கு வருவார்.

- Advertisement -

Trending News