Raayan movie update: தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் ஒவ்வொரு படத்தின் அப்டேட்டுக்காக தவமாக தவம் கிடக்கிறார்கள். இப்ப வருமா, அப்ப வருமா என நாளும் பொழுதும் தான் கழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர்களை இப்படி ஏங்க வைப்பதே கிடையாது.
ஒரு அப்டேட் வந்து அதைப்பற்றி பேசி முடிப்பதற்குள்ளையே அடுத்த அப்டேட்டை வெளியிட்டு விடுகிறார். இவர் மட்டும் என்ன மெஷினா, எப்படி இந்த மாதிரி வேலை செஞ்சு படங்களை அடுக்கி கிட்டே போறாருன்னு சந்தேகமும் வர தான் செய்யுது.
ஒரு பக்கம் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் தன்னுடைய ஆசைக்கு இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய அக்கா மகனை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தனுஷ் இயக்குவது எல்லோருக்கும் தெரியும்.
தன்னுடைய ஆசைக்காக 50 வது படமான ராயன் படத்தையும் தானே இயக்குகிறார். இதில் அவருடைய மகன் யாத்ரா ஒளிப்பதிவாளராக வேலை செய்து கொண்டிருப்பதாக கூட தகவல்கள் வெளியானது. ஏற்கனவே தனுஷ் தன்னுடைய அறிமுக இயக்கத்திலேயே பவர் பாண்டி படம் மூலம் மக்கள் மனதில் நிலைத்து நின்று விட்டார்.
காலம் கடந்து காதலியை நினைக்கும் அழகான காதல் கதையை சொல்லி மனதை வருட வைத்தார். ஆனால் தன்னுடைய இரண்டாவது டைரக்ஷனில் அப்படியே பல்டி அடித்து கேங்ஸ்டர் கதையை உருவாக்கி விட்டார். இந்த படத்தில் அவருடன் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிருஷ்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று ஒரு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
சர்ப்ரைஸ் கொடுத்த சன் பிக்சர்ஸ்
அதில் தனுஷ்- செல்வராகவன், தனுஷ்- எஸ் ஜே சூர்யா, தனுஷ்- காளிதாஸ் ஜெயராம், தனுஷ்- சந்திப் கிருஷ்ணா இந்த காம்போவில் யாருடைய காம்போவை பார்க்க மரண வெளிட்டிங்கில் இருக்கிறீர்கள் என ரசிகர்களை கமெண்ட் செய்ய சொல்லி இருக்கிறது.
உண்மையை சொல்லப் போனா இதுல ஒரு காம்போவ பார்த்தாலே தியேட்டர் ஸ்கிரீன் கிழியும் அளவுக்கு கைதட்டுகள் பறக்கும். அப்படி இருக்கும் போது இந்த நான்கு காம்போவும் ஒரு படத்தில் என்றால் சும்மாவா கேட்க வேண்டும்.
கரும்பு தின்ன கூலியா என்ற கதை தான் இது. ராயன் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை மாற்றி இருக்கிறது.
தேர்தல் முடிந்த உடனேயே இந்த படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருக்கிறது. தனுஷ் இயக்கும் அவருடைய 50ஆவது படமான ராயன் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது.