Rajini: அறிமுக இயக்குனர்கள் ஒரு படத்தை எடுத்துவிட்டு அது ரிலீஸ் ஆகுமா என்ற கவலையில் பலர் இருந்துள்ளனர். அதில் முக்கால்வாசி இயக்குனர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாமலே போனதும் உண்டு.
ஆனால் பிரபலமான இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் இப்போது வரை ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய் கொண்டு இருக்கிறது.
கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிதி பிரச்சனையால் ரிலீஸ் கால தாமதமாக வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் மீண்டும் புதிய மாற்றங்கள் செய்து கடந்த ஆண்டு வெளியிட முடிவு செய்திருந்தனர்.
துருவ நட்சத்திரத்தில் நடிக்க இருந்த ரஜினி
அதிலும் பிரச்சனை ஏற்பட கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக முடியாமல் போய் விட்டது. இப்போதும் புதிதாக ரிலீஸ் தேதி அறிவித்து உள்ள நிலையில் அந்த நேரத்தில் படம் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறிதான்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் மேனன், துருவ நட்சத்திரம் படத்தில் ரஜினி தான் முதலில் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்த கதை சூப்பர் ஸ்டார் இடம் சொல்ல அவருக்கும் பிடித்த போய் ஓகே சொல்லிவிட்டாராம்.
ஆனால் அன்று மாலையே காலா படத்தில் ஒப்பந்தம் ஆனதால் துருவ நட்சத்திரம் படத்தை ரஜினி நிராகரித்து விட்டாராம். அதன் பிறகு தான் இந்த படத்தில் விக்ரம் கமிட்டாகி இருக்கிறார். ஒருவேளை ரஜினி நடித்திருந்தால் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகி இருக்கும் என்று கௌதம் மேனன் கூறியுள்ளார்.