Rajini starrer first movie and released same date as MGR film release: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று வரை தனது பட்டத்திற்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படாது, திரைத்துறையில் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்ப காலங்களில் நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் ஆசியால் அவர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடிப்புக்கு அளவுகோல் வைத்து பலவித கொள்கை கோட்பாடுகளுடன்
சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் தமிழ்சினிமாவை ஆட்டிப்படைத்த காலத்தில் விரல் மூலம் வித்தைக்காட்டி தனக்கே உரித்தான ஸ்டைலால் தமிழ் ரசிகர்களை வியக்க வைத்தார்.
எம்ஜிஆர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி கொண்டே நடித்த இதயக்கனி திரைப்படம் வெளியான போது தான், ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்களும் ரிலீஸ் ஆனது.
ஸ்ரீவித்யா, கமல், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயசுதா மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த அபூர்வராகங்கள் வித்தியாசமான கதை அம்சத்துடன் பலவித கலவையான விமர்சனங்களை பெற்றது.
அபூர்வ ராகங்கள் நூறாவது நாள் விருது விழாவில் முதல்வர் கையால் படத்தில் நடித்த பலருக்கும் விருது கொடுக்கப்பட்ட போது,
கதையில் திருப்புமுனையாக முக்கிய கதாபாத்திரத்தை மேற்கொண்ட ரஜினியை மேடை ஏறி விருது வாங்க சிலர் அனுமதிக்க வில்லையாம்.
அதுமட்டுமின்றி எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது விரும்பத் தகாத வகையில் இவர் படத்தின் போஸ்டர் இருந்தது என்று, ஒட்டி இருந்த போஸ்டரை அப்புறப்படுத்த சொன்னாராம் எம்ஜிஆர்.
தமிழ் திரை உலகில் ஆரம்ப காலங்களில் பலவித இன்னல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் ஆளானவர் இன்று அனைத்தையும் உடைத்து வெற்றி படிகளில் ஏறி தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக, அசைக்க முடியா வண்ணம் ஆட்சி செய்து வருகிறார்