செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

ரஜினிக்கு வில்லனாகும் டான்ஸ் மாஸ்டர்.. யப்பா! லோகேஷ் இது வேற லெவல் காம்போவா இருக்கே

Thalaivar 171 Update: சினிமாவை பொறுத்த வரைக்கும் முன்பெல்லாம் வில்லன் கேரக்டர் என்றாலே சபிக்கப்பட்டவர்கள் தான். என்னதான் அவர்கள் நடித்து லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், மக்களிடையே நல்ல பெயர் இருக்காது.

சில நேரங்களில் படப்பிடிப்பு தளங்களில் வில்லன் நடிகர்களை பார்த்து அடிக்க பாய்ந்த சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் இப்போதைய தமிழ் சினிமா பயங்கர டிரெண்ட் செட்டராக மாறிவிட்டது. இப்போதெல்லாம் இந்த வில்லன் கேரக்டருக்கு தான் மவுசு அதிகம். ஒரு படத்தின் வெற்றி என்பது அதில்

நடிக்கும் வில்லன் கேரக்டரை பொறுத்து இப்போது அமைந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு நல்ல பரிச்சயமான முகங்களை வில்லனாக நடிக்க வைத்து ஓவர் ஹைப் ஏற்றிவிட்டார்.

மாஸ்டர் படத்தில் பவானி கேரக்டர், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டர் எல்லாம் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டது. லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் அப்டேட்டுக்காக ஒவ்வொரு நாளும் தமிழ் சினிமா ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணியில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் வழக்கமான lcu கான்செப்ட் இந்த படத்தில் இல்லை என முன்பே தெரிந்து விட்டது. இருந்தாலும் அவருடைய ஆஸ்தான நடிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தில் இருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் ரஜினிக்கு வில்லனாக யாரை நடிக்க வைப்பது என்ற பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது.

மாமன்னன் படத்திற்கு பிறகு பகத் பாசிலுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் அவர் தான் ரஜினிக்கு வில்லனாக நடிப்பார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. கமல் ஸ்டைலில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று அவருடைய சிஷ்யன் லோகேஷ் இப்போது சொல்லி இருக்கிறார்.

லியோ படத்தில் நடித்த ஒரு முக்கிய கேரக்டர் தான் இப்போது தலைவர் 171 இல் இணைந்து இருக்கிறது. லியோ படத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட காட்சி காபி கடையில் நடக்கும் சண்டை தான்.

விஜய் சட்டையை மடித்துக்கொண்டு கருகரு கருப்பாயி பாடலுக்கு ஆடியது இப்போ நெனச்சாலும் வேற லெவலா இருக்கும். அதே அளவுக்கு பேமஸ் ஆனது சாக்லேட் காபி தான். கண்ணு முன்னாடி என்ன நடந்தாலும் பரவாயில்லை என அசால்டா சாக்லேட் காப்பி என கேட்டு இருப்பார் சாண்டி மாஸ்டர்.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் நல்ல கவனத்தைப் பெற்றார். படம் முழுக்க நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்றும் ஒரு சில பேட்டிகளில் சாண்டி சொல்லி இருந்தார். இந்த ஆசையை தான் தற்போது லோகேஷ் கனகராஜ் நிறைவேற்றி இருக்கிறார்.

தலைவர் 171 படத்தில் சேண்டி மாஸ்டருக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் நெகட்டிவ் கேரக்டர் என சொல்லப்படுகிறது. லியோ படத்தில் விட்டதை தலைவர் 171 இல் பிடித்து விடுவார் போல டான்ஸ் மாஸ்டர் சாண்டி.

Trending News