சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

லோகேஷ் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் கில்மாவான வாரிசு நடிகை.. பயில்வான் தூக்கி போட்ட குண்டு

Bailwan and Lokesh: லோகேஷ் கனகராஜ் டாப் நடிகர்களின் விருப்பமான இயக்குனராக இருந்து வருகிறார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கப் போகிறார். இப்படத்திற்கான போஸ்டர் அண்மையில் வெளியாகி பட்டையை கிளப்பியது.

இந்த சூழலில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் லோகேஷ் வாரிசு நடிகையுடன் இருக்க வாய்ப்பு இருக்கிறது என குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

இயக்குனராக பட்டைய கிளப்பிய லோகேஷ் சமீபத்தில் இனிமல் என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். கமலஹாசனின் வரியில் ஸ்ருதிஹாசன் இசையில் இந்த பாடல் உருவாகி இருந்தது.

லோகேஷ் உடன் ஸ்ருதி காட்டிய நெருக்கம்

இதில் ஸ்ருதியுடன் லோகேஷ் நெருக்கமாக நடித்திருந்தார். இது குறித்து பயில்வான் கூறும்போது, ஸ்ருதி மேடையில் பேசும் போது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் லோகேஷை காதலிக்காமல் இருக்க முடியாது என்று கூறியிருந்தார்.

அப்படி என்றால் ஸ்ருதியும் லோகேஷை காதலிக்கிறார் என்று தானே அர்த்தம். அதோடு லோகேஷ் ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது உங்கள் வீட்டில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க எதுவும் சொல்லவில்லையா என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.

குடும்பத்தை பற்றி இங்கு நான் பேச விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இதிலிருந்து லோகேஷ் குடும்பத்தில் ஸ்ருதியால் பிரச்சனை வந்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என பயில்வான் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே பல காதல் சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஸ்ருதி இப்போது அடுத்ததாக லோகேஷ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கப் போகிறாரா என்று பயில்வான் கேள்வி எழுப்பி இருக்கிறார். நன்றாக இருந்த லோகேஷ் குடும்பத்தில் இவ்வாறு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

Trending News