சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

யானை பலத்துடன் சிங்கம் போல் கர்ஜிக்கும் கேப்டன் வாரிசு.. வெளியானது படை தலைவன் டீசர்

Padai Thalaivan: கேப்டன் மறைவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய குடும்பத்தினர் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் அவருடைய முதல் மகன் அரசியல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறார்.

அவருடைய இரண்டாவது மகன் படை தலைவன் படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

சிங்கம் போல் கர்ஜிக்கும் சண்முக பாண்டியன்

இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்து ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் இன்று சண்முக பாண்டியன் தன்னுடைய 31வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பட குழு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சண்முக பாண்டியன் சிங்கம் போல் எதிரிகளை வேட்டையாடுகிறார்.

அரை டவுசர் போட்டுக்கொண்டு பறந்து பறந்து அவர் அடிக்கும் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. ஆக மொத்தம் இப்படத்திற்குப் பிறகு அவர் நிச்சயம் தனக்கான இடத்தை பிடித்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News