Kushboo : குஷ்பூ 80களில் சினிமாவில் நுழைந்த நிலையில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். சிறிது காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த அவருக்கு ரசிகர்களால் கோயில் கட்டப்பட்டது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் அரசியலில் ஜொலித்திருக்கின்றனர். அதேபோல் குஷ்புமும் அரசியலில் களம் இறங்கினார். அதன்படி திமுக, அதிமுக, காங்கிரஸ் என பல கட்சிக்கு தனது ஆதரவை கொடுத்திருந்தார்.
கடைசியாக பாஜகவில் இணைந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு என்ற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் குஷ்பூ அங்கு தோல்வியடைந்த நிலையில் பாஜக சார்பில் தேசிய மகளிர் ஆணைய பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக குஷ்பூ தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். இப்போது திடீரென பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
குஷ்புக்கு ஏற்பட்ட விபத்து
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு குஷ்புவுக்கு விபத்தில் சிக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில் இப்போது வரை குணமாகாமல் அவதிப்பட்டு வருகிறாராம்.


மேலும் மருத்துவக் குழுவும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் நீண்ட பயணங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது என கண்டிப்போடு சொல்லி உள்ளனர். ஆகையால் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் தன்னால் பங்கேற்க முடியாது என்பதை குஷ்பூ கூறியிருக்கிறார்.
ஆனாலும் சமூக வலைத்தளம் மூலம் பாஜகவின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வேன். மேலும் பிரதமர் மோடி கண்டிப்பாக 3வது முறையாக பதவி ஏற்பதை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் குஷ்பூ அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.