விஜய்க்கு ஜோடி போட போட்டி போடும் 4 நடிகைகள்.. 10 கோடியை பெற போகும் அதிர்ஷ்டசாலி யார்?

Vijay : விஜய் இப்போது வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 69 படம் உருவாக இருக்கிறது. சமீபத்தில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார்.

அதாவது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார். ஆகையால் தளபதி 69 படம் தான் அவரது கடைசி படமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இப்படத்தில் ஒவ்வொரு விஷயமும் பக்கவாக அமைய பார்த்து செய்து வருகிறார்கள்.

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் டிவிவி என்டர்டைன்மென்ட் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்க உள்ளார்.

தளபதியுடன் ஜோடி போட போட்டி போடும் நான்கு நடிகைகள்

தளபதி 69 படத்திற்காக இப்போது நான்கு நடிகைகள் இடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கோலிவுட்டில் பிஸியான நடிகையாக இருக்கும் த்ரிஷாவை படக்குழு அணுகி உள்ளது. ஏற்கனவே கில்லி, குருவி, லியோ போன்ற படங்களில் விஜய் உடன் த்ரிஷா சேர்ந்து நடித்துள்ளார்.

அடுத்ததாக சமந்தாவும் இந்த லிஸ்டில் இருக்கிறார். விஜய் மற்றும் சமந்தா இருவரும் நடித்த தெறி, மெர்சல் மற்றும் கத்தி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மீண்டும் இந்த கூட்டணி அமைந்தால் ஹிட் தான்.

திரிஷா, சமந்தா ஆகியோரை தொடர்ந்து பாலிவுட் நடிகை அலியா பட் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோரிடமும் தளபதி 69 படத்தில் நடிப்பதற்காக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு 250 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

அதோடு தளபதி 69 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகைக்கு கிட்டத்தட்ட 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகையால் இந்த நான்கு நடிகைகளில் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.