Director Mohan G: அரசியல் களங்கள் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஓட்டு கேட்கும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் பல பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களை ஆதரித்து சோசியல் மீடியாவில் ட்வீட் போட்டு வருகின்றனர். அப்படித்தான் திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி ஒரு ட்வீட் போட்டு இருந்தார்.
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியானிக்கு இவர் ஆதரவு தெரிவித்து இருந்தார்.
பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த மோகன் ஜி
அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் படுமோசமாக பதில் அளித்துள்ளார். இன்னும் 50 வருஷம் ஆனாலும் நீ அரசியலும் கத்துக்க போவதில்லை.
படம் எடுக்கவும் கத்துக்க போறதில்லை. வன்மம் புடிச்ச நாயே என விமர்சித்துள்ளார். உடனே மோகன் ஜி உங்களை விட மட்டமான மனநிலை பாதிக்கப்பட்ட அரசியல் கட்சி வேறு யாருமில்லை. நான் நாயாகவே இருந்து விட்டு போகிறேன் பைத்தியமே என பதில் அளித்துள்ளார்.
இந்த சண்டை அடுத்தடுத்த ட்வீட்டுகள் மூலம் வலுவடைந்தது. இயக்குனர் மோகனும் விடாமல் இதை எதிர்கொண்டு வருகிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் வேட்பாளரை ஆதரித்து பேசுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதற்கு ஏன் இழிவாக சண்டை போட வேண்டும் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.