ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பொண்டாட்டி இருந்தும் ரகசிய உறவில் இருந்த 5 பிரபலங்கள்.. தனுஷ் குடும்பம் போல் சீரழிந்த மற்றும் ஒரு ஃபேமிலி

Actor Dhanush: சினிமா பிரபலங்கள் என்றாலே கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். ஆனால் அதுவே சிலரின் வாழ்க்கையை மொத்தமாக காலி செய்து இருக்கிறது. அப்படி பொண்டாட்டி இருந்தும் ரகசிய உறவில் இருந்த ஐந்து பிரபலங்கள் பற்றி இங்கு காண்போம்.

நாகர்ஜுனா

தெலுங்கு டாப் ஹீரோவான இவர் லட்சுமி என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அதன் பிறகு அமலா மீது காதல் வயப்பட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

பின் இவருக்கு தபுவுடன் ரகசிய உறவு இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த செய்திக்கு நாங்கள் நண்பர்கள் மட்டுமே என அந்த ஜோடி பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தது.

தனுஷ்

தற்போது இவருடைய விவகாரம் தான் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற அந்தஸ்தை தூக்கி எறியும் அளவுக்கு இவருடைய குடும்ப வாழ்க்கை சின்னாபின்னமாகி ஆகிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் தனுஷ் ஏகப்பட்ட நடிகைகளுடன் கிசு கிசுவில் சிக்கி இருக்கிறார். அதில் அமலாபாலுடன் இவர் உறவில் இருப்பதாக வெளிப்படையாகவே பேசப்பட்டது. அதுதான் தற்போது இவருடைய விவாகரத்துக்கும் காரணமாக இருக்கிறது.

பிரபுதேவா

நயன்தாராவுடன் இவருக்கு இருந்த காதல் விவகாரம் ஊர் உலகம் அறிந்தது தான். ரமலத் என்பவரை திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் இவர் வாழ்ந்து வந்தார்.

ஆனால் நயனுடனான காதலுக்கு பிறகு தன் மனைவியை இவர் விவாகரத்து செய்தார். ஆனாலும் நயன்தாராவுடன் இவருக்கு பிரேக் அப் ஆனது குறிப்பிடத்தக்கது.

கே எஸ் ரவிக்குமார்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருக்கும் இவருக்கு நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் மீது ஒரு காதல் இருந்தது. இந்த செய்தி அரசல் புரசலாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டும் வந்தது.

ஆனால் இந்த விவகாரம் அவருடைய மனைவிக்கு தெரிந்து பெரும் பிரச்சனையாக வெடித்தது. அதை அடுத்து இந்த ஜோடி பிரிந்து விட்டதாக ஒரு செய்தி இப்போதும் உண்டு.

போனி கபூர்

மோனா கபூரை திருமணம் செய்த இவருக்கு ஸ்ரீதேவி மீது காதல் ஏற்பட்டது. அதனால் தன் மனைவியை விவாகரத்து செய்த இவர் காதலியை மணந்து கொண்டார்.

இந்த விவாரம் இப்போதும் கூட சர்ச்சையாக தான் பேசப்பட்டு வருகிறது. பணத்துக்காக தான் ஸ்ரீதேவியை அவர் திருமணம் செய்து கொண்டதாக கூட கூறப்படுகிறது. ஆனாலும் இவர்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாகத்தான் வாழ்ந்தார்கள்.

இப்படியாக இந்த பிரபலங்களின் திருமண வாழ்க்கை இரண்டாவது காதலால் முடிவுக்கு வந்தது. அதில் தனுஷ் குடும்பம் போல் பிரபுதேவாவின் குடும்பமும் பெரும் பிரச்சனையை சந்தித்தது.

Trending News