Romeo Movie Review: விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ரோமியோ. இன்று வெளியாகி உள்ள இப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்.
திருமண வயதை தாண்டியும் கல்யாணம் செய்யாமல் இருக்கிறார் விஜய் ஆண்டனி. அதேபோல் சினிமாவில் ஹீரோயினாக வரவேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கிறார் மிருணாளினி.
இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைகின்றனர். ஆனால் மிருணாளினிக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து கேட்கிறார். இதனால் விஜய் ஆண்டனி ரோமியோவாக மாறி காதல் சேட்டை செய்கிறார்.
அதன் மூலம் மனைவியின் மனதில் இடம் பிடித்தாரா? மிருணாளினியின் லட்சியம் என்ன ஆனது? இந்த ஜோடி சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் கதை. இதில் விஜய் ஆண்டனி புது பரிமாணத்தில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.
ரோமியோவாக சேட்டை செய்யும் விஜய் ஆண்டனி
அதேபோன்று மிருணாளினி தன் கேரக்டரை கச்சிதமாக உள்வாங்கி நடித்துள்ளார். கதை முழுதும் அவரை சுற்றியே இருப்பதால் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
திரை கதையை பொறுத்தவரையில் சில இடங்களில் எதிர்பாராத காட்சிகள் இருக்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்துள்ளது.
மேலும் கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது. இப்படி படத்தில் பல பிளஸ் பாயிண்டுகள் இருந்தாலும் சில மைனஸ் விஷயங்களும் இருக்கிறது.
அதில் ஒன்றுதான் படத்தின் நீளம். அதேபோல் தேவையில்லாத பாடல் காட்சிகளும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதை இயக்குனர் தவிர்த்து இருக்கலாம்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி குடும்பத்துடன் ரசிக்கும் படியாக இருக்கிறது இந்த ரோமியோ. அதனால் இது கோடை விடுமுறைக்கு ஏற்ற படமாக தான் இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5