Vikram: விக்ரமை பொருத்தவரை போற போக்குல ஒரு படத்தை நடித்து விடலாம் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. தான் நடிக்கக்கூடிய படம் வெற்றியாகவும் விருது வாங்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்பதற்காக உடலை வருத்திக் கொண்டு நடிக்கும் திறமையான நடிகர்.
அப்படிப்பட்ட இவருடைய கேரியரில் மறக்க முடியாத எத்தனையோ படங்கள் இருக்கிறது. முக்கியமாக இவர் நடித்த படங்களான சேது, தில், தூள், ஜெமினி, காசி போன்ற பல படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்து படங்களிலுமே நடிப்பின் நாயகனாக எதார்த்தமான நடிப்பை கொடுத்திருப்பார்.
விக்ரமின் பிளாக்பஸ்டர் மூவி
அப்படிப்பட்ட படங்களில் ஒரு படத்தை 22 வருடங்களுக்குப் பின் ஒரு மாஸ் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அதாவது சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் தான் ஜெமினி. இப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 22 வருஷம் ஆகிவிட்டது.
ஆனாலும் இன்னும் வரை இப்படம் மக்களின் பேவரைட் படமாக இடம் பிடித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இப்பொழுது விக்ரம் நடிப்பில் வெளிவரும் படங்கள் எதுவும் மக்களிடம் ரீச் ஆகாமல் கலமையான விமர்சனங்களை பெற்று வருவதால் சற்று துவண்டு போய் இருக்கிறார்.
அந்த வகையில் ஜெமினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து நடிக்கலாமா என்ற ஒரு பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு எந்த அளவிற்கு விக்ரம் மிக முக்கிய காரணமோ, அதே மாதிரி வில்லன் கேரக்டரில் அசத்திய கலாபவன் மணியின் நடிப்பும் மறக்கவே முடியாது.
அப்படிப்பட்ட இவர் தற்போது இல்லாததால், இவருடைய நடிப்புக்கு ஈடு இணையாக அரவிந்த்சாமி நடிக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறார்.
ஒருவேளை இந்த மாதிரியான ஐடியா இருந்தால் இவர்களுடைய காம்போவில் ஜெமினி 2 உருவாக வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால் ஜெமினி படத்தை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்து மக்களை குஷி படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.