செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

வேட்டையன் ரஜினிக்கு வில்லனான ஆறடி பாடி பில்டர்..  பகத் பாசிலை மாற்றிய படக்குழு!

Vettaiyan movie six-foot body builder who is the villain for Rajini: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலருக்கு பின் அட்டகாசமான கம்பேக்குடன்  அதிரடியான திரைப்படங்களில் தடம் பதித்து வருகிறார்.

ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் உடன் தலைவர் 171 என இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிசியாக உள்ளார் தலைவர்.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினியுடன்பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். 

காதல், ஆக்சன், காமெடி போன்ற கமர்சியல் படங்களாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் உணர்ச்சி பூர்வமான படங்களையே தொகுத்து அளித்து வருகிறார் இயக்குனர் ஞானவேல்.

அந்த வகையில் தலைவர் நடிக்கும் வேட்டையன் என்பது போலி என்கவுண்டருக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்யும் விதமான கதையாகும்.

இதில் வில்லன் யார் என்று பலவாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பகத் பாசில் ரஜினியின் வேட்டையன் உடன் இணைந்தார். இவர் ஏற்கனவே மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் வில்லனாக தமிழக மக்களிடையே பிரபலமான பகத் பாசிலுக்கு இந்த படத்திலும் வில்லன் தான் கேரக்டர் தான் என்று முடிவு செய்து இருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் ரசிகர்கள் எதிர்பாராத வண்ணம் வேட்டையன் திரைப்படத்தில் காமெடி டிராக்கில் வர உள்ளாராம் பகத் பாஸில்.

இது தனக்கு செட் ஆகுமா என்று இயக்குனரிடம் அச்சம் தெரிவிக்க பின் அவர் முழு கதையையும் கூறி பகத் பாஸிலிடம் ஒப்புதல் வாங்கிக் கொண்டாராம்.

வேட்டையன் படத்தில் ரஜினியுடன் மோதி இருக்கும் வில்லன் 

“பலமான எதிரி தான் நாயகனின் பலத்தை வெளிக்கொண்டு வருவான்” என்பது போல் வேட்டையன் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைய உள்ள வில்லன் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வந்த நிலையில்,

பாகுபலியின் ஆறடி பாடி பில்டர் ராணா தான் அந்த வில்லன் என்று தெளிவுபடுத்தி உள்ளார் இயக்குனர் ஞானவேல்.

தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து வரும் சூட்டிங் இல் தினேஷ் மாஸ்டரின் மேற்பார்வையில் மாஸ் ஓபனிங் பாடலை படமாக்கி வருகிறார்கள்.   

ராணா டகுபதி நாயகனாக கலக்கியதை விட அவரது தோற்றத்திற்கும் ஆளுமைக்கும்  வில்லனாகவே பல படங்களில் தடம் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News