சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிரபுதேவா, பிரசாந்துடன் மரண குத்து குத்திய விஜய்.. தளபதிக்கு விசில் போடு, பட்டய கிளப்பும் ஃபர்ஸ்ட் சிங்கிள்

GOAT First Single: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் தன்னுடைய அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு வெளியாகும் படம் இது.

அது மட்டும் இன்றி பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்து வருகின்றனர். அதுவும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

தளபதிக்கு விசில் போடு

இப்படி சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று இதன் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்திருந்தது.

மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசில் போடு என தளபதியின் குரலில் இப்பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் தற்போது இதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

Trending News