Shankar’s game changer movie Satellite rights go for high price: தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த சங்கர் அவர்கள் உலகநாயகனுடன் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படப்பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கால தாமதத்தால் சங்கர் தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராம்சரண் உடன் இணைந்து கேம் சேஞ்சர் படத்தில் ஒப்பந்தமானார்.
கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் உடன் கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தளபதி நடித்த வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜ் அவர்கள் தான் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என்பதற்காக 300 கோடி பட்ஜெட்டில் அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் அரசியலைப் பின்புலமாகக் கொண்டு வித்தியாசமான திரைக்கதையில் தெறிக்க விட்டு இருக்கிறார் சங்கர்.
இந்த படத்தின் ஒருபாடல் காட்சி மற்றும் கிளைமாக்ஸ் இல் வரும் ஆக்சன் காட்சிக்காக மட்டுமே கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாம்.
படப்பிடிப்பு தொடங்கி மூன்று வருடங்கள் ஆன பின்பும் படம் முடிந்த பாடு இல்லை. இது தவிர காலதாமதத்தால் ரசிகர்களின் ஹேஷ்டேக் வேற தீயாய் பரவியது.
இதற்கிடையே படத்தின்பட்ஜெட்டை தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. என்று பலரிடமும் சங்கரை திட்டி தீர்த்தார் தயாரிப்பாளர் தில்ராஜ். ஆனால் நிலைமை இப்போது தலைகீழானது.
அதிக விலைக்கு விற்பனையான கேம் சேஞ்சர் படத்தின் சாட்டிலைட் உரிமை
கேம் சேஞ்சர் படத்தின் டிஜிட்டல் சாட்டிலைட்உரிமை மட்டும் 275 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. பிரபல ஜி டிவி நிறுவனம், அட்வான்ஸ் தொகையில் 10% தயாரிப்பாளருக்கு வழங்கி உள்ளது.
படத்தின் ரிலீஸ் பற்றி கேட்டதற்கு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பான் இந்தியா மூவியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.