Atlee: பொதுவாக யாரையும் தோற்றத்தை வைத்து எடை போடக்கூடாது என்று சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இயக்குனர் அட்லிக்கு நன்றாகவே பொருந்தும். பார்க்க தான் ஆளு ஒண்ணுமே தெரியாத அப்ராணியாக மூஞ்சியே வைத்திருப்பார்.
ஆனால் படத்தை இயக்க வந்துவிட்டால் கோடிக்கணக்கான வசூலை பார்க்காமல் விட மாட்டார் என்ற முத்திரையை வாங்கி விட்டார். இதை தவிர தயாரிப்பாளர்களுக்கும், ஹீரோகளுக்கும் வேறு என்ன வேண்டும். அதனால் தான் தற்போது வாண்டட் இயக்குனர்களில் ஒருவராக அட்லி இடம் பிடித்து விட்டார்.
அதிலும் கடைசியாக பாலிவுட்டில் களம் இறங்கி ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தின் மூலம் 1100 கோடி வசூலை கொடுத்ததால் தற்போது பாலிவுட் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் இவருக்காக தான் வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜ மரியாதை கிடைத்ததால் அட்லி செய்யும் அக்கப்போர்
இதனாலேயே இவரை கூப்பிட்டு அம்பானியின் மகன் திருமண விழாவில் விருந்து கொடுக்கும் அளவிற்கு பெரிய பிரபலம் ஆகிவிட்டார். அந்தப் பங்க்ஷனில் அட்லிக்கு கிடைத்தது ராஜ மரியாதை என்றே சொல்லலாம். போதாதற்கு அங்கே போன தோனியும், அட்லீயை பார்த்து கட்டிப்பிடித்து ஒரு நட்பை உண்டாக்கி சென்றிருக்கிறார்.
இதனால் தற்போது அட்லியின் லெவல் வேற லெவலுக்கு போய்விட்டது. உடனே இவருடைய பழைய நட்பு வட்டாரத்தை எல்லாம் துண்டித்து வருகிறாராம். அந்த வகையில் கிட்டத்தட்ட அட்லீயுடன் பழக்கத்தில் இருந்த சில்வண்டுகள் அனைவரையும் அப்படியே ஸ்டாப் பண்ணி விட்டாராம்.
அதற்கு காரணம் அடுத்தடுத்து பெரிய இடத்தில் சகாசம் வைக்கும் பொழுது இந்த மாதிரி சில்வண்டுகள் எல்லாம் பக்கத்தில் சேர்க்கக்கூடாது என்பதற்காக. இது மட்டுமில்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் இவரை யாராவது அட்லி என்று கூப்பிட்டால் பயங்கரமாக டென்ஷன் ஆகி விடுகிறாராம்.
அதாவது இவரை பெயர் சொல்லிக் கூப்பிட கூட யாருக்கும் தகுதி இல்லை என்று படப்பிடிப்பு தளத்தில் பேயாட்டம் ஆடிக்கொண்டு வருகிறாராம். இதை தான் சொல்வார்கள் ஓவர் நைட்டில் ஒபாமா ஆனதால் இப்படித்தான் தலைகால் புரியாமல் ஆடுவார்கள் என்று.
இன்னும் டோலிவுட்டிலும் ஒரு முத்திரையை பதிக்க வேண்டும் என்பதற்காக அல்லு அர்ஜுனாவை வைத்து இயக்கிக் கொண்டு வருகிறார். இந்த படமும் ஆயிரம் கோடி வசூலை தாண்டிவிட்டால் இன்னும் என்னென்ன அக்கப்போரெல்லாம் பண்ண போகிறாரோ விஜய்யின் ஆசை தம்பி என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.