வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஷாலுக்கு வேட்டு வைக்க காத்திருக்கும் ரெட் ஜெயன்ட்.. பூதாகரமாக வெடிக்கும் மார்க் ஆண்டனி விவகாரம்

Actor Vishal: விஷால், ஹரி கூட்டணியில் உருவாகி இருக்கும் ரத்னம் ஏப்ரல் 26 அன்று திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது.

அனல் பறக்கும் சண்டை காட்சிகளுடன் ரத்தம் தெறிக்க வெளிவந்த ட்ரெய்லரில் கெட்ட வார்த்தைகளும் இருந்தது. அதுதான் இப்போது ஒரு பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் விஷால் ரெட் ஜெயன்ட் அட்டூழியங்கள் பற்றி புட்டு புட்டு வைத்திருப்பது அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே இப்படி ஒரு விமர்சனம் கோலிவுட்டில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் எந்த ஹீரோவும் அதை வெளிப்படையாக சொன்னதில்லை. அப்படி இருக்கும்போது விஷால் மார்க் ஆண்டனி ரிலீசின் போது எந்த அளவுக்கு பிரச்சனை வந்தது என்பதை போட்டு உடைத்திருக்கிறார்.

மார்க் ஆண்டனி விவகாரம்

அதன்படி ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் முக்கிய நபர் ஒருவர் மார்க் ஆண்டனி பட ரிலீசை தள்ளி வைக்க வேண்டும் என்று அதிகாரம் செய்திருக்கிறார். அதைப்பற்றி கூறியிருக்கும் விஷால் ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்ற நீங்கெல்லாம் உருப்புட்டதா சரித்திரமே இல்லை.

நீங்க என்ன தமிழ் சினிமாவை குத்தகைக்கு எடுத்து இருக்கீங்களா? கஷ்டப்பட்டு வட்டிக்கு வாங்கி படத்தை ரிலீஸ் பண்ண வந்தா உங்க இஷ்டத்துக்கு தள்ளி வைக்க சொல்றீங்க என பொங்கி உள்ளார்.

மேலும் அந்த நபரை நான் தான் உதயநிதியிடம் சேர்த்து விட்டேன். ஆனால் அவர் என் படத்துக்கு பிரச்சனை செய்தார். நானாக இருந்ததால் இதை எப்படியோ சரி பண்ணி விட்டேன்.

அதனால் தயாரிப்பாளருக்கும் லாபம் கிடைத்தது. எனக்கும் ஒரு வெற்றி கிடைத்தது. ஆதிக் ஒரு பெரிய படத்தில் கமிட் ஆகி விட்டார். இல்லையென்றால் என்ன ஆகி இருக்கும்.

ஆனால் நிச்சயம் இது ரத்னம் படத்திற்கு பிரச்சினையாக அமையும். எப்போது எனக்கு வேட்டு வைக்கலாம் என அவர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இதையெல்லாம் நான் சும்மா விடமாட்டேன் என கோபம் கொப்பளிக்க பேசியுள்ளார்.

Trending News