ஷங்கர் மருமகன்னா சும்மாவா.? தருண் கார்த்தியின் மறுபக்கம்

Shankar : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இரு படங்களுமே இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது.

ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார். அதிதி சினிமா மீது உள்ள ஆர்வத்தால் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோஹித் உடன் திருமணம் நடைபெற்றது.

ரோஹித் சில வழக்குகளில் சிக்கிய நிலையில் ஐஸ்வர்யா அவரிடம் இருந்து விவகாரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்நிலையில் தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவுக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. சினிமாவில் முக்கிய பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தருண் கார்த்திகேயன் ஷங்கரிடம் அசிஸ்டன்ட் இயக்குனராக வேலை பார்த்தார் என்று கூறப்பட்டது. அதோடு ஹரியின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ரத்னம் படத்திலும் அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றினார் என சொல்லப்பட்டது.

அமெரிக்காவில் பணிபுரியும் ஷங்கரின் மருமகன்

இந்நிலையில் சங்கர் மற்றும் அவரது சம்மந்தி ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஷங்கர் மணமக்களை வாழ்த்தியதற்கு நன்றி என்று தெரிவித்திருந்தார். மேலும் தன்னுடைய 31 ஆண்டு சினிமா வாழ்க்கையில் முக்கிய பங்கு உங்களுக்கு இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.

தருண் கார்த்திகேயனின் தந்தை பேசுகையில் எல்லோரும் தருண் அசிஸ்டன்ட் டைரக்டர் என்று கூறி வருகிறார்கள். அவர் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். மேலும் தருண் கார்த்தியின் தந்தை ஐடி கம்பெனி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தருண் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். சினிமா மீதும் இவருக்கு அதிக ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் இயக்குனர் ஆகவோ அல்லது நடிகராகவோ இவரை சினிமாவில் பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.