Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ரெண்டு பொண்டாட்டி ரெண்டு புருஷன் கதையை மட்டுமே வைத்து இத்தனை நாளாக உருட்டி வந்தார்கள். இதனை மறுபடியும் நிரூபிக்கும் வகையில் தற்போது பாக்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணம் ஆகப்போகிறது மாதிரி காட்சிகள் இடம் பெற்று வருகிறது.
அதாவது இதுவரை பழனிச்சாமி, பாக்யாவை ஒரு நல்ல தோழியாகவும் ஒரு அக்கறையான நண்பராகவும் இருந்து கூடவே வழி நடத்தி வந்தார். ஆனால் தற்போது வருகிற எபிசோடுகளில் பழனிச்சாமி மனதுக்குள் பாக்யா மீது ஒரு அபிப்பிராயம் வந்துவிட்டது. அத்துடன் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற ஆசையும் தோன்றி விட்டது.
இது எங்க போய் முடிய போகிறது என்பதற்கு ஏற்ப குடும்பத்தில் இருப்பவர்களும் இவர்களுடைய கல்யாணத்தை நடத்தி வைக்க மும்மரமாக இருக்கிறார்கள். ஆனாலும் இதற்கெல்லாம் ஒருபோதிலும் பாக்கியா சம்மதத்தை கொடுக்க மாட்டார். ஒருவேளை இயக்குனருக்கு ரெண்டு பொண்டாட்டி விஷயம் எல்லாம் மிகவும் பிடித்தமான ஒன்றுதான்.
அட்டகாசம் பண்ணும் பாக்கியலட்சுமி சீரியலின் ஆர்டிஸ்ட்கள்
அதனால் பாக்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து பாக்யாவின் மகள் இனியாவும் பழனிச்சாமியின் சகோதரி மகனும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்களுடைய காதல் எந்த எல்லைக்கு போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.
இப்படி ஒரு பக்கம் இருக்கும் பொழுது, ராதிகா வேற வாந்தி எடுக்கிறார். இதை பார்த்ததும் கோபி பயத்தில் புலம்ப ஆரம்பித்து விடுகிறார். ஆனால் இதற்கு உண்மையான காரணம் கோபி நடத்தும் ரெஸ்டாரண்டில் ராதிகா சாப்பிட்ட உணவு எதுவும் ஒத்துக் கொள்ளாமல் போனதால் தான் இந்த மாதிரியாக இருக்கும்.
ஆனாலும் இதை வைத்து கோபியும் ராதிகாவும் என்னென்ன அட்டகாசம் பண்ணப் போகிறார்களோ, ஒருவேளை கோபி அப்பாவாக போகிறரோ என்னமோ. இப்படியும் சீன்கள் பாக்கியலட்சுமி சீரியலில் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
ஏனென்றால் இந்த மாதிரி மட்டமான கதையை வைத்து தான் நாடகத்தை உருட்டி வருகிறார்கள். இதற்கு ஒரு எண்டே இல்லையா என்பது போல் தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது.