சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வைத்தியத்துக்கு வந்த வேதா மீது காதலை கொட்டும் விக்ரம்.. மோதலும் காதலும் சீரியலில் ஏற்படப்போகும் ட்விஸ்ட்

Modhalum kadhalum Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மோதலும் காதலும் சீரியலில், விக்ரம் வேதா வீட்டில் இருக்கும் பொழுது டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டு வந்தார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக விக்ரமின் அத்தை மூலிகை மருத்துவமனைக்கு கூட்டு போய் இருக்கிறார்.

அங்கு போன ஆரம்பத்தில் விக்ரமுக்கு அந்த இடம் ஒத்தே வரவில்லை. இதனால் வேண்டா வெறுப்பாக இருந்த விக்ரமுக்கு போக போக அந்த மருத்துவத்தின் மகத்துவமும், வேதா மீது விருப்பமும் வர ஆரம்பித்துவிட்டது. அதனால் முழு ஈடுபாடுடன் அந்த மருத்துவத்தை செய்ய வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் அந்த மருத்துவத்தை சுற்றி தீ விபத்து ஏற்பட்டதால் மூலிகை பொருள்கள் பாதி தீ எரிந்து விட்டது. இதனால் மேற்கொண்டு இந்த மருத்துவத்தை செய்ய முடியாது என்று தற்சமயமாக மூடி வைக்கலாம் என்று விக்ரமின் அத்தை முடிவெடுக்கிறார்.

இதை கேள்விப்பட்ட விக்ரம் இந்த ஒரு நல்ல விஷயத்தின் மூலம் எல்லோரும் பயனடைய வேண்டும். அதோடு என்னுடைய அத்தையின் கனவு மருத்துவம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று சொல்லி மலைக்குப் போய் அந்த மூலிகை மருந்தை எடுத்துட்டு வாரேன் என்ற கிளம்பி விட்டார்.

ஆனால் கிளம்பும்போது வேதா, விக்ரமை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறார். விக்ரம் சமாதானப்படுத்தி மழைக்கு போய் அந்த பூச்செடியை எடுத்து விடுகிறார். ஆனால் இவர் வரும் வரை நான் வெளியிலே காத்துக் கொண்டிருப்பேன் என்று வேதா இருக்கிறார்.

ஆட்டத்தை கலைக்க வரும் மிரளாலினி

அந்த வகையில் விக்ரம் அந்த மருத்துவ பூவை எடுத்துட்டு வந்து நேரடியாக வேதா கையில் கொடுக்கிறார். கொடுத்ததும் விக்ரம் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறார். இதனை தொடர்ந்து விக்ரம் வேதா ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வைத்தியத்துக்கு வந்த காரணத்தை மனதில் வைத்து அதற்கான முயற்சியை எடுக்கப் போகிறார்கள்.

இங்கே வந்த பிறகுதான் இவர்களுடைய காதலும் ரொமான்ஸும் அதிகரித்து கண்ணாலேயே பேசிக் கொள்கிறார்கள். ஆனால் இதில் வரப்போகிற ட்விஸ்ட் என்னவென்றால் இந்த சீரியல் இனி மாலை 6 மணிக்கு மாற்றப் போகிறார்கள். அத்துடன் இவர்களுடைய சந்தோசத்தை கெடுக்கும் விதமாக மிரளாலினி, தன்வியை வைத்து ஆடு புலி ஆட்டம் ஆடப் போகிறார்.

Trending News