நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்ட தேர்தல் இன்று தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
காலை 7 மணிக்கு ஆரம்பித்த இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியோடு நிறைவு பெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்கின்றனர்.
அதில் 5 மணி நிலவரப்படி எவ்வளவு வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் 63.20% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
5 மணி நிலவரப்படி பதிவாகியுள்ள வாக்குகள்
அதில் தர்மபுரியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்து நாமக்கல்லில் 67.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.
அதன்படி இந்த இரண்டு தொகுதிகள் தான் தற்போது முன்னிலையில் இருக்கின்றன. மொத்தம் 35 தொகுதிகளுக்கும் சேர்த்து 60 சதவீதத்திற்கு மேலாகவே வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
அந்த வரிசையில் சென்னை சென்ட்ரல் 57.04 சதவீத வாக்குகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் மொத்த வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை 72.09% என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 56.68% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.