Modhalum Kadhalum Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மோதலும் காதலும் சீரியலில், வேதாவிற்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்பதற்கு ஏற்ப விக்ரம் கொல்லிமலைக்கு சென்று மருத்துவச் செடியை பறிக்க கிளம்பிவிட்டார். போகும் வழியில் சந்தித்த நபரிடம் அந்த இடத்திற்கான வழியை கேட்டு தெரிந்து கொண்டார்.
ஆனால் அந்த நபர் அது ரொம்பவே பயங்கரமான விஷப் பாம்பு இருக்கும் இடம். அதனால் உயிருக்கு கூட ஆபத்து வர வாய்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக நீங்கள் அந்த இடத்திற்கு போய் தான் ஆகணுமா என்று கேட்கிறார். அதற்கு விக்ரம் நீங்கள் இடத்தை மட்டும் காட்டுங்கள் மீதி எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
பிறகு அந்த நபர் விக்ரமுக்கு அந்த இடத்தை காட்டிவிட்டு கையில் ஒரு கம்பையும் கொடுத்து உங்க கண்ணுக்கு ஏதாவது ஒரு பாம்பு தென்பட்டால் அதை தயவு தாட்சியம் பார்க்காமல் அடித்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுக்க வேண்டிய பூச்செடியை எடுத்துட்டு திரும்புங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.
அதே மாதிரி விக்ரமும் அந்த செடியை தேடிக் கொண்டு போகிறார். ஆனால் போகும்போது அந்த நபர் சொன்ன மாதிரி பாம்பு விக்ரம் காலை கொத்தி விடுகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத விக்ரம், மருந்து செடியை பறித்து விட்டு தள்ளாடி கொண்டு மருத்துவச் சாலைக்கு போகிறார்.
ஆனால் விக்ரம் இன்னும் வரவில்லை என்று வேதா மிகவும் பயத்தில் அழுது கொண்டிருக்கிறார். பிறகு வேதாவிடம் நெருங்கிய விக்ரம் அந்தப் பூவை கொடுத்துவிட்டு மயக்கம் போட்டு கீழே விழுகிறார். பிறகு அங்கு இருப்பவர்கள் விக்ரமை பார்த்தவுடன் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதாவது இவரை பாம்பு சீண்டி இருக்கிறது என்று.
கண்ணிமைக்காமல் விக்ரமை பார்த்துக் கொண்ட வேதா
உடனே அது என்ன நாகம் என்று விக்ரமின் அத்தை கேட்டுக்கொண்டார். அதற்கு தகுந்தாற்போல் மருந்தை கொடுத்துவிட்டு வேதாவிடம் இரவு முழுவதும் அவன் தூங்காமல் இருக்க வேண்டும். அது உன் கையில் தான் இருக்கிறது கொஞ்சம் கூட அவன் தூங்கக் கூடாது என்று சொல்லி வேதாவிடம் ஒப்படைத்துவிட்டு போய்விடுகிறார்.
பிறகு விக்ரம் பக்கத்தில் இருந்து வேதா தூங்க விடாமல் அவரை டைவர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த நேரத்திலும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசி ரொமான்ஸ் பண்ணுகிறார்கள். இதனை தொடர்ந்து அந்த ஒரே ராத்திரியில் வேதா, விக்ரமை தூங்க விடாமல் பார்த்து வைத்தியத்தை நன்றாக முடித்து விடுகிறார்.
தற்போது இவர்கள் இருவருக்கும் காதல் வர ஆரம்பித்துவிட்டது. இனி இவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட விக்ரமின் அத்தை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் அங்கே போய் தான் மிர்லாணி தன்வி மூலம் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கப் போகிறார். இதையெல்லாம் தாண்டி எப்படி ஒற்றுமையாக இருக்கப் போகிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது.