திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கோட் முதல் கூலி வரை, இதை கவனிச்சீங்களா? டீசரில் ஆச்சரியப்பட வைத்த ஒற்றுமை, லோகி ஸ்டைல்

Rajini : இப்போது உள்ள இளம் இயக்குனர்கள் தங்களது படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல விஷயங்களை வைத்து வருகின்றனர். அந்த வகையில் கோட், வீரதீர சூரன் மற்றும் கூலி ஆகிய படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்த மூன்றிலுமே லோகேஷ் ஸ்டைல் இருக்கிறது. விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் முதல் முறையாக கூட்டணி போட்ட படம் தான் கோட். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழ் புத்தாண்டுக்கு வெளியானது.

இந்நிலையில் இது விஜய்யின் 68வது படம். அதைக் குறிப்பிடும் வகையில் விசில் போடு பாடலில் பார் 68 என்று கட்டப்பட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக விக்ரம் நடிப்பில் உருவாகும் சியான் 62 படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியானது.

கோட் முதல் கூலி வரை உள்ள ஒற்றுமை

எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் வீரதீர சூரன் என வைக்கப்பட்டுள்ளது. அந்த டைட்டில் வீடியோவில் பொட்டிக் கடையில் சாமான் கொடுக்கும்போது விக்ரம் ஒரு வாடிக்கையாளரிடம் 62 ரூபாய் என்று குறிப்பிடுவார்.

goat-coolie-rajini
goat-coolie-rajini

இதன் மூலம் சியான் 62 உடன் இது ஒத்துப் போகிறது. அதேபோல் லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகிறது தலைவர் 171 படம். யாரும் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த படத்திற்கு கூலி என்று டைட்டில் வைத்திருந்தார் லோகேஷ்.

அந்த டைட்டில் வீடியோவிலும் 171 என்ற எண் இடம் பெற்றிருந்தது. இவ்வாறு நடிகர்கள் படு எண்ணிக்கையை குறிப்பிடும் வகையில் இயக்குனர்கள் டீசரில் வைத்து இருக்கிறார்கள்.

Trending News