ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மருமகனாக இல்ல, ரசிகனாக ரஜினியை விரும்பும் தனுஷ்.. கூலி டீசருக்கு போட்ட ட்விட்

Actor Dhanush : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரின் உறவு பல இடங்களில் பார்க்கும்போது எல்லோரும் பொறாமைப்படும் அளவிற்கு தான் இருக்கும். ரஜினியின் ரசிகனாகத்தான் தனுஷ் சினிமாவில் நுழைந்தார்.

அதுவும் மேடை பேச்சுகளில் தனுஷின் பேச்சை கேட்டால் அப்படியே ரஜினி பேசுவது போலத்தான் இருக்கும். அவ்வாறு சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை தற்போதும் தனுஷ் பின்பற்றி வருகிறார். அதோடு ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு ரஜினியின் மருமகன் என்ற அந்தஸ்தை பெற்றார்.

ஆனால் சமீபத்தில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடி இருக்கின்றனர். இவ்வாறு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் இப்போதும் சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக இருக்கிறார் தனுஷ்.

ரஜினியின் படத்திற்கு ட்வீட் போட்ட தனுஷ்

அதாவது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கூலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தையே தெறிக்கவிட்டு வருகிறது. அந்த வகையில் தனுஷும் அந்த போஸ்டரை வெளியிட்டு மாஸ் என்ற பதிவிட்டு இருக்கிறார்.

dhanush
dhanush

தனுஷின் இந்த பதிவு ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. என்னதான் மனைவியை விவாகரத்து செய்யும் முடிவில் இருந்தாலும் இப்போதும் ரஜினி படத்திற்கு தனுஷ் பதிவு போட்டது அவருடைய பண்பை காட்டுகிறது.

மேலும் தனுஷ் தொடர்ந்து ரஜினியின் பட டைட்டில் வைத்து வெற்றி கண்டு உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இப்போதும் ரஜினி மற்றும் தனுஷ் இடையே சுமூகமான உறவு இருந்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

Trending News