வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

30 நாள் எடுத்த படத்தை தூக்கி எறிந்த விஷால்.. எல்லா கோட்டையும் அழித்து முதலில் இருந்து ஆரம்பிக்கும் சண்டக்கோழி!

Vishal threw away the 30-day film and started shooting Thupparivaalan from the beginning: தமிழ் திரையுலகில் அதிகமான ஆக்சன்  படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் தான் விஷால். 

உதவி இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கிய விஷால்,  தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க செல்லமே படத்தில் முதன் முதலாக நடிகராக அறிமுகமானார்.

அடுத்தடுத்து இவரது படங்கள் வெற்றி படங்களாக அமையவே தொடர்ந்து ஹீரோவாகவே தனது திரை பயணத்தை தொடர்ந்தார். தற்போது ஹரியுடன் ரத்தினம் படத்தை முடித்துள்ளார்.

ஏப்ரல் 26 ரிலீஸ் ஆக உள்ள விஷாலின் ரத்தினம்

மேலும் ஏப்ரல் 26 ரத்தினம் ரிலீஸ் ஆக உள்ளதை முன்னிட்டு பட பிரமோஷனில் பிஸியாக இருக்கிறார் விஷால். இதை முடிச்சிட்டு துப்பறிவாளன் 2 ஆரம்பிக்க உள்ளார் 

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் நேர்மறையான விமர்சனங்களுடன் வசூலையும் வாரி குவித்தது.  

இந்த பிரம்மாண்ட வெற்றியின் விளைவாக, அடுத்த பாகத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தனர் துப்பறிவாளன் படக்குழுவினர்.  படப்பிடிப்பு முழுவதும் லண்டனில் நடத்த உள்ளதாக தகவல் பரவியது.

வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்ட துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு, 30 நாட்கள் நடந்து முடிந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கு இடையேயான மனஸ்தாபங்களால் பாதியிலேயே நின்று போனது.

இதன்பின் பொது வெளியில் இயக்குனர் மிஷ்கின், விஷாலை பற்றி தவறாக பேசியதன் விளைவு, மோதல் தீவிரமானது. இனி துப்பறிவாளன் படத்தை  தானே இயக்கப் போவதாகவும், மிஷ்கின் தேவையில்லை என்றும் அதிரடியாக அறிவித்தார் விஷால்.

ஒரு கட்டத்தில் மிஷ்கின் கோபத்தை மறந்து, விஷாலை சமாதானம் செய்ய முற்பட்டபோதும்,

இனி எந்த ஒரு சமாதானமும் தேவை இல்லை என்று கூறி துப்பறிவாளன் 2 படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் தனி ஒருவனாக முன்னெடுக்க ஆரம்பித்தார் விஷால்.

இதற்கான துணை நடிகர், நடிகைகள் தேர்வு முதலியவற்றை நடத்தி முடித்த விஷால் லொகேஷன்காக அஜர்பைஜான், லண்டன் முதலிய நாடுகளையும் தேர்ந்தெடுத்து உள்ளார்.

மிஷ்கின் எடுத்த காட்சிகளை தூக்கி எறிந்த விஷால்

மிஷ்கினது கதைக்கு நன்றி கூறி இயக்கத்தை கையில் எடுத்து இயக்குனராக தன்னை நிரூபிக்க தயாராகிவிட்டார் இந்த சண்டக்கோழி. 

இதனால் ஏற்கனவே எடுத்து முடித்துள்ள 30 நாட்கள் பட காட்சிகளை தவிர்த்து விட்டு முற்றிலும் புதிதாக  துப்பறிவாளன் 2  படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளார் விஷால்.

Trending News