திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

படுத்துற பாடுல உண்மையான வேட்டையனா மாறிய ரஜினி.. அப்செட் மூடில் சூப்பர் ஸ்டார்

Rajini: போட்டி நிறைந்த இவ்வுலகில் தொடர்ந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவருடைய இமேஜை தக்க வைத்துக் கொண்டிருப்பது சாதாரண விஷயம் இல்லை. அதுவும் 74 வயதில் கூட இளம் ஹீரோகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வெற்றி நாயகனாக ஜெயித்துக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, வேட்டையன் படத்தில் கமிட் ஆகி நடித்துள்ளார். லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி நிலையில் வருகிற அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரஜினி, அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி விட்டார். அதனால் லோகேஷ் கூட்டணியில் கூலி படத்தில் ஒரு சம்பவத்தை செய்வதற்கு தயாராகி விட்டார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் டிஜே ஞானவேல், ரஜினிக்கு கொஞ்சம் குடைச்சல் கொடுத்து வருகிறார்.

ஓவர் டென்ஷனில் ரஜினி

அதாவது இடைவெளிக்குப் பிறகு கடைசி கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 25ஆம் தேதி ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ரஜினி கொடுத்த கால் சீட்டு எல்லாத்தையும் டிஜே ஞானவேல் யூஸ் பண்ணி விட்டார். அப்படி இருந்தும் இன்னும் கால்ஷீட் வேண்டும் என்று ரஜினியிடம் கேட்டு தொந்தரவு பண்ணி வருகிறார்.

பிறகு ஒரு வழியாக ரஜினி, மே 12ஆம் தேதி வரை வேட்டையன் படத்திற்காக கால் சீட்டை கொடுத்திருக்கிறார். ஆனாலும் இது போதாது என்று ஞானவேல் சொல்கிறாராம். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் ரஜினி முழி பிதுங்கி போய் நிற்கிறார்.

அத்துடன் எனக்கு அடுத்தடுத்து நிறைய கமிட்மெண்ட் இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் இப்படி பண்ணுகிறீர்கள் என்று டிஜே ஞானவேலுவிடம் ரஜினி டென்ஷனாக பேசியிருக்கிறார். தற்போது ரஜினி நிலைமை எப்படி இருக்கிறது என்றால் ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால வைத்து அல்லோளப்பட்டு வருவது போல் தெரிகிறது.

என்னதான் வெற்றிக்காக வாய்ப்புகள் பின்னாடி போனாலும் நிம்மதி இல்லாமல் கடைசிவரை டென்ஷன் ஆகவே இருக்கிற நிலைமை ரஜினிக்கு வந்து விட்டது.

Trending News