Weight loss surgery: ‘சைஸ் சீரோ’ இன்றைய தலைமுறையினரை தவறான பாதையில் அழைத்து செல்லும் மோகம். இறுக்கமா ஒரு டாப்ஸ், சட்டை போடணும் அதனால தொப்பை தெரியக்கூடாது. இறுக்கமான ஜீன்ஸ்கள் அணியனும், தொடை பெருசாக இருக்கக் கூடாது.
இப்படி அவங்களுக்குள்ளயே அழகுன்னா இதுதான் என முடிவு பண்ணி அதற்காக பட்டினியும் கிடக்கிறார்கள். முன்னெல்லாம் நண்பர்கள் கூட்டம் என்று ஒன்று இருந்தால் அதுல நாலு பேரு கொஞ்சம் குண்டா இருப்பாங்க, ஒரு ரெண்டு பேரு பூசனா போல இருப்பாங்க, ஒருத்தர் மெலிந்த தேகமா இருப்பாங்க.
ஆனா இப்போ இருக்கிற இளைஞர்கள் கூட்டத்தை பாத்துக்கிட்டீங்கன்னா மொத்தமா அத்தனை பேரும் ஒல்லியா தான் இருக்காங்க. குண்டாகவே இருக்க கூடாது என்று ஆண் பிள்ளைகளாக இருக்கட்டும், பெண் பிள்ளைகளாக இருக்கட்டும் எல்லோருக்குமே ஒரு கட்டுப்பாடாகவே மாறிடுச்சு.
குறைந்த உடல் எடை என்பது ஆரோக்கியம் என்பதை தாண்டி இப்ப அழகு என்ற விஷயத்துக்குள் வந்து விட்டதால் தான் இவ்வளவு பிரச்சனை. பாண்டிச்சேரியில் இருந்து ஹேமச்சந்திரன் என்னும் ஒரு இளைஞர் சென்னைக்கு உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்ய வந்திருக்கிறார்.
ஆபரேஷன் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துல மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இது எல்லாத்துக்கும் காரணம் அவர் யூடியூப்ல பார்த்த ஒரு விளம்பரம். ஆறு மாசத்துல 50 லிருந்து 60 கிலோ குறைகிற ஆபரேஷன் அது. பெத்தவங்களுக்கு விருப்பம் இல்லனாலும், பையன் ஆசைப்படுறான்னு லட்சக்கணக்கில் கட்டி கடைசியில உயிர் போனது தான் மிச்சம்.
‘சைஸ் சீரோ’ மோகம்
அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர் என்று சொல்வார்கள். அப்படி ஃபாலோ பண்ற வரைக்கும் எல்லாமே நல்லா தான் இருந்துச்சு. இன்னொன்று ஒல்லியாக இருப்பது தான் அழகு என்ற விஷயம் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை இல்லை.
சினிமாவில் இருக்கும் நடிகைகள் கூட புசுபுசுன்னு தான் இருப்பாங்க. இந்த உலக அழகி போட்டேன் உன்ன வச்சு எந்தெந்த இடம் எந்தந்த சைஸ்ல தான் இருக்கணும் அப்பதான் அந்த பட்டம்னு ஒரு மாய பிம்பத்தை உருவாக்கினார்கள்.
இப்போ வீட்ல இருக்குற ஒவ்வொரு பெண் பிள்ளைகளுமே அந்த சைஸ் பிரச்சனைக்குள் தங்களை கொண்டு வந்துட்டாங்க. உடல் எடை குறைப்பு என்பது என்னைக்கு ஆரோக்கியத்துக்காக மட்டுமே என்று தீர்மானம் எடுக்கிறோமோ அப்போதான் இந்த மாதிரி உயிர் பலி நடக்காமல் இருக்கும்.
உப்பு, சர்க்கரையின் அளவு உடம்பில் கூடிவிட்டது, கொஞ்ச தூரம் நடந்தாலே மூச்சு வாங்குது, என் வேலையை என்னால் ஏன் சுறுசுறுப்பா செஞ்சிக்க முடியல அப்படின்னு ஒரு கட்டம் வரும்போது தான் உடம்பை குறைப்பது பற்றி யோசிக்கணும்.
அதை விட்டுட்டு குண்டு என்பது அசிங்கம்னு நெனச்சதாலையும், அப்படி குண்டா இருக்கிறவங்களை அசிங்க
ப்படுத்தினதாலையும் தான் இது போன்ற உயிரிழப்பு நடந்து கொண்டிருக்கிறது. காலையில் எந்திரிச்சு ஒரு அவிச்ச முட்டை சாப்பிட்டு விட்டு, கிரீன் டீ குடிச்சிட்டு உடனே போயி வெயிட் மெஷின்ல ஏறி நின்னு எடை குறைந்துவிட்டான்னு பார்த்தா எந்த விதத்தில் நியாயம்.
உடல் எடை குறைப்பு என்பது நம் வாழ்வியலோடு இணைந்து, பொறுமையாக நடக்க வேண்டும். பொறுமை இல்லாமல் விரத முறையில் குறைப்பது, பேலியோ டயட், வீகன் டயட் என வித்தியாச வித்தியாசமாக பெயர் வைத்து உடல் உறுப்புகள் நாசமாகி உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இந்த டயட் முறைகளையும் என்னால பின்பற்ற முடியாது, அதனால ஆபரேஷன் பண்ணி உடம்பை குறைக்க போறேன்னு விபரீத முடிவு எடுக்குறாங்க. பேன்கிரியாடிக் வால்வுகளை முடிச்சு போடுவது, இரைப்பையை சுருக்குவது, வயிற்றில் ஒரு பகுதியை கட் செய்வது என இயற்கையோடு விளையாடும் விபரீத விளையாட்டுக்கு முடிவு தான் மரணம்.
ஏதாவது ஒரு பவுடரை கலந்து குடித்து ஒல்லியாகி விடலாம் என நினைத்து சிறுநீரக இழப்பு வரை நடைபெறுகிறது. உடல் எடை என்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது, அதை பொறுமையாக தான் செய்ய வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்வது தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு.