சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சேதுவின் காதலால் கனவை மறந்து டூயட் பாட போகும் சின்ன மருமகள்.. கொளுத்தி போட்டு வேடிக்கை பார்க்கும் சகுனி

Chinna Marumagal Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சின்ன மருமகள் சீரியலில், சேதுவின் உண்மையான காதலும் தமிழின் கனவை நிறைவேற்றும் விதமாக ஜெயிக்க ஆசைப்படும் விதமாகவும் கதை நகர்ந்து வருகிறது. இந்நிலையில் சேது ஆசைப்பட்ட மாதிரி தமிழை கல்யாணம் பண்ணிவிட்டார். ஆனால் வீட்டிற்கு சின்ன மருமகளாக வந்த தமிழுக்கு சமையல் எதுவும் தெரியாததால் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தமிழை யாரும் எதுவும் சொல்லிட விடக்கூடாது என்று சேது பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். அந்த வகையில் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் தமிழுக்கு உதவி செய்து காதலை காட்டி வருகிறார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மனதிற்குள் சேது இடம் பிடித்து வருகிறார்.

தற்போது தமிழ் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது அவருக்கு உதவியாக மூத்த மருமகள் குக்கரில் சாப்பாடு எப்படி பண்ணுவது என்று கற்றுக் கொடுக்கிறார். அப்பொழுது வேற வேலை வந்ததால் அங்கிருந்து மூத்த மருமகள் கிளம்பி விடுகிறார். இதற்கிடையில் தாமரையின் அம்மா குக்கரை சரியில்லாமல் மாட்டிவிட்டு வெடிக்கட்டும் என்று போய்விடுகிறார்.

தமிழை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும் சேது

இது தெரியாமல் தமிழ் அங்கிருந்து சமைத்துக் கொண்டிருக்கிறார். சரியாக அந்த நேரத்தில் சேது வந்து தமிழை எதிர்ச்சியாக கூப்பிட்ட பொழுது தமிழ் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். கிளம்பி கொஞ்ச நேரத்திலேயே குக்கர் வெடித்து விடுகிறது. இதனால் அதிர்ச்சியில் மயக்கம் போட்டு தமிழ் விழுந்து விடுகிறார். உடனே சேது, தமிழை தூக்கி தண்ணி தெளித்து காப்பாற்றுகிறார்.

பிறகு எழுந்து பார்த்த தமிழ், சேதுவிடம் எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன் என்று சொன்னதும் சேது உணர்ச்சிவசப்பட்டு தமிழை கட்டிப்பிடித்து உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று முழு காதலையும் கொட்டி உணர்ச்சிவசமாக பேசுகிறார்.

அப்பொழுது தமிழுக்கும் சேது மீது காதல் வர ஆரம்பித்து விட்டது. இதனை தொடர்ந்து தமிழ் அவருடைய கனவை மறந்து கொஞ்சம் கொஞ்சமாக சேது உடன் சேர்ந்து டூயட் பாட ஆரம்பிக்கப் போகிறார். இதற்கிடையில் தமிழையும் சேதுவையும் பிரிக்க வேண்டும் என்று சகுனி வேலையை பார்த்த தாமரைக்கு கடைசியில் ஒன்னும் இல்லாமல் போய்விட்டது.

Trending News