புதன்கிழமை, ஜனவரி 22, 2025

புருஷனுக்காக அண்ணனையே தூக்கி எறிந்த ராஜி.. பதறிப் போய் ஓடோடி வந்த பாண்டியனின் மச்சான்கள்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், ராஜியின் அண்ணனை சரவணன், கதிர் மற்றும் செந்தில் அடித்ததால் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்து கம்பி என்ன வைத்து விட்டார்கள். இதனால் எப்படியாவது இவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்று பாண்டியன் முயற்சி எடுத்து வருகிறார்.

அத்துடன் கோர்ட்டுக்கு இந்த கேஸ் போக கூடாது என்பதற்காக பாண்டியன் வக்கீலிடம் என்ன பண்ணலாம் என்று ஐடியா கேட்கிறார். அதற்கு வக்கீல், ராஜி எங்க அண்ணன் குமரவேலு என்னை அடித்துவிட்டான் என்று அவர் மேலே கம்பளைண்ட் கொடுத்தால் இந்த கேஸிலிருந்து உங்க மகன்கள் மூன்று பெரும் வெளியே வந்து விடுவார்கள் என்று சொல்கிறார்.

உடனே அது எப்படி என்று கேட்கும் பொழுது வக்கீல் சொல்வது என்னவென்றால், அவங்களுடைய பையன் குமரவேலு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகக்கூடாது என்று உங்க மகன்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்ட பாண்டியன் அது எப்படி அவங்க அண்ணன் மேல் ராஜி புகார் கொடுப்பார். அது சரிப்பட்டு வராது நான் ஒத்துக்க மாட்டேன் என்று சொல்கிறார்.

கதிர் தான் முக்கியம் என்று ராஜி எடுத்த முடிவு

அதற்கு ராஜி அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் எங்க அண்ணன் மேல் புகார் கொடுக்கிறேன் என்று போலீஸிடம் போய் நடந்த அனைத்து உண்மைகளையும் சொல்லி குமரவேலு மீது புகார் கொடுக்கிறார். அதன்படி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ராஜீ அப்பா மற்றும் சித்தப்பாவிற்கு தகவல் போகிறது. இதை கேட்டதும் பதறி அடிச்சு ஒட்டுமொத்த குடும்பமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்.

வந்ததும் அவர்களுக்கும் வேறு வழி இல்லை பாண்டியனின் மகன்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி தான் ஆகணும். அதன்படி அடிச்சதுக்கு அடி சரியா போய்விட்டது என்ற பார்முலா படி போட்ட கோட்டை எல்லாம் அழித்து அனைவரும் வீட்டுக்கு திரும்ப போகப் போகிறார்கள். இதற்கிடையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தங்க மயிலின் குடும்பம் பாண்டியனிடம் விசாரிக்க போகிறார்கள்.

ஆனாலும் அவர்கள் இதற்கெல்லாம் அஞ்சாத குடும்பமாக தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த கல்யாணத்தை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து சரவணன் மற்றும் தங்க மயிலின் கல்யாணம் கோலாகலமாக நடக்கப் போகிறது.

Trending News