ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

100 கோடி எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி.. சைலன்ட்டா வந்து வசூல் வேட்டையாடிய 4 மலையாள படங்கள்

100 Crore Malayalam Movies: எப்போதுமே மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுப்பார்கள். அதிலும் இந்த வருடம் வெளியான அடுத்தடுத்த படங்கள் 100 கோடி வரை வசூலித்திருக்கிறது.

இத்தனைக்கும் வருடம் பிறந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள்ளாகவே நான்கு படங்கள் இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறது.

அதில் மஞ்சுமல் பாய்ஸ் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டை உருவாக்கியது என்று சொல்லலாம். குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் 248 கோடி வரை வசூலித்தது.

வசூல் வேட்டையாடிய ஆடு ஜீவிதம்

அதேபோல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகாரிக்கவும் ஒரு காரணமாக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக இளசுகளை மிகவும் கவர்ந்த பிரேமலு 136 கோடிகளை வசூலித்துள்ளது.

அந்த தைரியத்தில் தற்போது இரண்டாம் பாகத்திற்கும் படக்குழு தயாராகிவிட்டனர். அடுத்ததாக பிரித்விராஜ் தன் உடலை வருத்தி நடித்த ஆடு ஜீவிதம் நல்ல வரவேற்பை பெற்றது.

வெறும் 2 கோடியில் எடுக்கப்பட்ட படம் தற்போது 156 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. அடுத்ததாக கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளிவந்த பகத் பாசிலின் ஆவேசம் சில வாரங்களிலேயே 104 கோடிகளை வசூலித்துள்ளது.

இப்படியாக இந்த நான்கு படங்களும் மலையாள பாக்ஸ் ஆபிஸை துவம்சம் செய்திருக்கிறது. அதேபோல் கடந்த பிப்ரவரியில் வெளியான மம்முட்டியின் பிரமயுகம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending News