வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தொகுதி வாரியாக ரகசியமாக நடக்கும் சர்வே.. ரிப்போர்ட்டை அலசி ஆராயும் முக்கிய கட்சிகளின் பெரிய தலைகள்

Election 2024: நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதை அடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாட்டின் மொத்தம் 69.71% வாக்குகள் பதிவாகி இருந்தது. முன்னதாக 72.09% என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 69.46 சதவீதம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் அதை மாற்றி மூன்றாவது முறையாக 69.71% என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தர்மபுரியில் தான் அதிக வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

மேலும் தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக குறைவான வாக்குகள் தான் பதிவாகி இருந்தது. அதனாலேயே இப்போது கட்சிகள் எல்லாம் தொகுதி வாரியாக சர்வே எடுத்து வருகிறதாம்.

சத்தம் இல்லாமல் நடந்து வரும் சர்வே

இதற்கான வேலைகள் தற்போது சத்தம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. அதில் 15 சட்டமன்ற தொகுதிகளில் தான் அதிகபட்ச வாக்குகள் அங்கு பதிவாகி இருக்கிறதாம்.

அதன் வாரியாக கணக்கெடுப்புகள் தொடங்கப்பட்டு எந்த வாக்கு மையத்தில் அதிகபட்ச ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது என்ற சர்வேயும் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளின் நிர்வாகிகள் இதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் வரும் ரிப்போர்ட்டுகள் மேலிடத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த இடத்தில் நமக்கு சாதகமான வாக்குகள் கிடைக்கும். இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைவு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு வருகிறது. அதை அலசி ஆராய்ந்து வரும் கட்சிகள் தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்து வருவதாக கூறப்படுகிறது.

Trending News