ஐட்டம் நடிகையால் அடக்கி வாசித்த வெங்கட் பிரபுவின் செல்லப்பிள்ளை.. அசம்பாவிதத்திற்கு பின் தொடங்கிய அட்டூழியம்

Venkat Prabhu: வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.

அது சில சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கோட் பட நடிகர் பர்த்டே பார்ட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அதற்கு நெல்சன், லோகேஷ் என ஒட்டுமொத்த பிரபலங்களும் படை எடுத்து வந்திருக்கின்றனர். அதன்படி வெங்கட் பிரபுவின் செல்லப் பிள்ளையாக இருக்கும் வைபவ் தான் இந்த பார்ட்டியை கொடுத்திருக்கிறார்.

வைபவ் கொடுத்த பார்ட்டி

பார்ட்டி கேங் என கூறப்படும் இந்த நண்பர்கள் எப்போதுமே என்ஜாய் செய்து வருவார்கள். ஆனால் இடையில் இது போன்ற அலப்பறைகளை கொஞ்சம் மூட்டை கட்டி வைத்திருந்தனர்.

இதற்கு முக்கிய காரணம் எஸ்பிபி சரண், சோனா சர்ச்சை தான். ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட போது எஸ் பி பி சரண் தன்னிடம் அத்து மீறியதாக சோனா மீடியாவில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அது வைபவ் கொடுத்த பார்ட்டி தான். அந்த சம்பவத்திற்கு பிறகு இவர் கொஞ்சம் அடக்கி வாசித்தார். ஆனால் தற்பொழுது கோட் போன்ற பெரிய படத்தில் நடிப்பதால் மீண்டும் பார்ட்டி மூடுக்கு வந்திருக்கிறார்.

அதன்படி தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் இவர் நடத்தி இருக்கிறார். அதில் மொத்த கோடம்பாக்கமும் கலந்து கொண்டு ஜாலி செய்திருக்கின்றனர்.