திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பத்தாயிரம் கோடிக்கு மேல் சொத்து.. ரஜினி, கமலை ஓரம்கட்டிய கோடீஸ்வர தமிழ் சினிமா குடும்பம்

Rajini : சினிமாவில் பல வருடங்களாக பயணித்து வரும் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களை ஓரம்கட்டி பத்தாயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளது நட்சத்திர குடும்பம் ஒன்று. இந்த செய்தி இப்போது பலரையும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது.

அதாவது ரஜினி, கமல் காலத்தில் இருந்த நடிகராக இருந்தும் அவர்கள் அளவுக்கு ஹிட் படங்களை கொடுக்கவில்லை. ஆனாலும் அவருக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர். மேலும் அந்த நடிகர் தனக்குத்தானே சில கட்டுப்பாட்டுகளையும் வைத்துக்கொண்டார்.

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவகுமார் தான். அவருடைய இரண்டு மகன்கள் ஆன சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவில் பட்டையை கிளப்பி வருகிறார்கள். அவரது மகள் பிருந்தாவும் பாடகியாக உள்ளார்.

ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள சிவக்குமார் குடும்பம்

இவ்வாறு மொத்த குடும்பமும் சினிமாவில் தங்களது பங்களிப்பை கொடுத்து வரும் நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் இப்போது ரீ என்ட்ரி கொடுத்து படங்களில் நடித்து வருகிறார். சிவகுமாரின் மகள் உட்பட மொத்த குடும்பமும் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

அதில் குறிப்பாக சூர்யா தனது மனைவியுடன் 2டி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 150 கோடி பிளாட் வாங்கி அதில் 28 கோடிக்கு வீடு கட்டி உள்ளார். இது தவிர மும்பையில் 70 கோடி மதிப்பிலான பிளாட் வாங்கியுள்ளார்.

பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார் சூர்யா.மேலும் கார்த்திக் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 8 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். விளம்பரங்களில் நடிக்க கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

இது தவிர ஜோதிகா, சிவகுமார் மற்றும் அவரது மகள் பிருந்தா ஆகியோரின் சொத்துக்களை சேர்த்தால் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் அதிகமாக உள்ளதாம். மேலும் இவர்கள் சம்பாத்தியம் அதிகமாக இருந்தாலும் அகரம் போன்ற சில தொண்டு நிறுவனங்கள் நடத்தி மக்களுக்கும் நல்லது செய்து வருகிறார்கள்.

Trending News