சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கோபியின் திருவிளையாடல் ஆரம்பம்.. ராதிகாவை தங்க தட்டுல வச்சு தாங்க போகும் பாக்கியவின் மாமியார்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவின் மகள் மயூ பாக்யாவின் வீட்டிற்கு வந்து பேசிய பொழுது பாதி உண்மையை உளறி விட்டார். பின்பு மாடியில் இருந்து அம்மாவிடம் போன் பேசிய ராதிகாவிடம் பாக்யா நீங்கள் பண்ற ஒவ்வொரு விஷயமும் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று பாக்கியா கேட்கிறார். அதற்கு ராதிகாவும், ஆமாம் நான் கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால் அதை எப்படி வெளியே சொல்வது என்று தெரியாமல் தட்டு தடுமாறுகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான பாக்கியா நல்ல விஷயம் தானே இதுக்கு ஏன் தயங்குகிறீர்கள் என கூறுகிறார்.

உடனே இதைக் கேட்டு ராதிகா அனைவரிடமும் சொல்லி விடலாம் என்று முடிவுக்கு வந்து விடுகிறார். இதற்கு இடையில் எழிலும் அமிர்தாவும் ஒரு கல்யாணத்திற்கு கிளம்பி போகிறார்கள். அப்பொழுது பாட்டி எழிலே பார்த்து இது என்ன இருந்தாலும் உன் குழந்தை கிடையாது. நீ என்னதான் பாசத்தை காட்டி வளர்த்தாலும் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் வந்ததும் அப்பா பாசம் அங்கே தான் போகும்.

கடைசியில் நீ தனி மரமாக நிற்கிற மாதிரி சூழ்நிலை வரக்கூடாது என்ற ஒரு அக்கறையில் தான் நான் பிடிவாதமாக இருக்கிறேன். அதனால் என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது நான் கேட்ட மாதிரி உனக்கு அமிர்தாவுக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று பாக்கியவின் மாமியார் கூறுகிறார்.

ஆய வேலை பார்க்கப் போகும் பாக்கியா

இதைக் கேட்டு வருத்தத்துடனே எழிலும் அமிர்தாவும் கிளம்பிப் போய் விடுகிறார்கள். பிறகு ராதிகா எடுத்த முடிவின்படி கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வரப்போகிறது. சும்மாவே பாட்டி கோபியை விட்டுக் கொடுத்து பேச மாட்டாங்க. இப்பொழுது ராதிகா கர்ப்பம் என்று தெரிந்து விட்டால் தங்க தட்டில் வைத்து தான் தாங்குவாங்க.

இதுதான் சான்ஸ் என்று கோபியும் மறுபடியும் அவருடைய திருவிளையாடலை ஆரம்பிக்கப் போகிறார். அதாவது இப்பொழுது கோபியும் ராதிகாவும் தங்கி இருப்பது பாக்யா வீட்டில் தான். இன்னும் குழந்தை பெற்றெடுக்கும் வரை இங்கே நாங்கள் இருந்து கொள்கிறோம் என்று சொல்லப் போகிறார். அதற்கும் ஒன்று சொல்லாத பாக்கியாவும் கோபியின் அம்மாவும் வாயை மூடி இருக்கப் போகிறார்கள்.

பிறகு இவர்களுக்கும் சேர்த்து இனி பாக்கியா தான் சமைத்துக் கொடுக்கப் போகிறார். கடைசியில் அந்த வீட்டு வேலைக்காரியாக மட்டுமில்லாமல் ராதிகா கோபியின் குழந்தைக்கு ஆயா வேலையும் பார்க்கப் போகிறார்.

Trending News