செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

ரோகிணியின் தலையெழுத்தை மாற்றிய முத்து.. தலைகால் புரியாமல் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினிக்கு நல்ல காலம் பிறந்துருச்சு என்று சொல்வதற்கு ஏற்ப பொய் பித்தலாட்டம் பண்ணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் எப்படியாவது மனோஜிடம் இருந்து பணத்தை ஆட்டைய போட்டுட்டு போன ஜீவாவை கண்டுபிடிக்க முயற்சி எடுத்தார்.

அதே மாதிரி ஜீவா, ரோகினிடம் மாட்டியதால் போலீஸ் கையும் களவுமாக பிடித்து விட்டது. பிறகு ஜீவா எப்படியாவது இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று என்னிடம் பணம் இல்லை. நான் கனடாவிற்கு போன பிறகு அங்கிருந்து அனுப்பி விடுகிறேன் என்று சொல்கிறார்.

ஆனால் எதற்கும் அசராத ரோகினி, ஜீவாவை விடாமல் பணத்தை கொடுத்தால் மட்டும் நீ இங்கிருந்து கிளம்ப முடியும் என்று சொல்கிறார். உடனே போலீசும் நீங்கள் பணத்தை செட்டில் பண்ணவில்லை என்றால் FIR போட்டு விடுவோம். அப்படி என்றால் நீங்கள் கனடாவிற்கு நாளைக்கு போக முடியாது என்று கூறுகிறார்.

முத்து குடும்பத்திற்கு மொத்தமாக ஆப்பு வைத்த ரோகினி

உடனே பயந்து போன ஜீவா வேற வழி இல்லாமல் பணம் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் இப்பொழுது என்னிடம் 27 லட்சம் பணம் இல்லை. 15 லட்சம் பணம் மட்டும்தான் கொடுக்க முடியும் என்று சொல்லிய நிலையில் மனோஜ்க்கு டிரான்ஸ்பர் பண்ணி விட்டார்.

கிடைச்சது வரை லாபம் என்று மனோஜ் மற்றும் ரோகினி ஓவர் குதூகலத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் இந்த கேசை இதோட முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மனோஜ் கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கிவிட்டார். இதற்கு சாட்சியாக ரோகிணி கையெழுத்து போட்டு விட்டார்.

அதே மாதிரி ஜீவா பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் என்பதற்காக சாட்சி கையெழுத்து போடுவதற்கு யாரும் இல்லாமல் இருந்தார். அந்த நேரத்தில் ஜீவா தற்செயலாக வெளியே வந்து பார்க்கும் பொழுது முத்து நிற்கிறார். உடனே ஜீவா சாட்சி கையெழுத்தை கேட்டதும் ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் முத்துவும் சாட்சி கையெழுத்து போட்டு விட்டார்.

இந்த ஒத்த கையெழுத்தால் ரோகிணியின் தலையெழுத்தே மாறிவிட்டது என்றே சொல்லலாம். அடுத்ததாக கிடைத்த பணத்தை ரோகிணியும் மனோஜும் வீட்டில் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ரோகிணியின் அப்பா பணம் கொடுத்தார் என்பது போல் மாத்தி சொல்லிவிட்டார்கள். எது எப்படியோ எனக்கு தேவை பணம் அது கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்தில் விஜயா தலைகால் புரியாமல் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

பிறகு அனைவரும் சாப்பிடும் பொழுது முத்து, மனோஜிடம் ரோகிணி அப்பா பணம் அனுப்புகிறார் என்றால் அது ரோகினியின் அக்கவுண்டுக்கு தானே அனுப்பி இருக்கணும். அவர் ஏன் உனக்கு அனுப்பினார் என்ற கேள்வியை கேட்கிறார். இதை எதிர்பார்க்காத மனோஜ் திருட்டு முழி முழிக்கிறார். உடனே ரோகினிக்கு பொய் எல்லாம் கைவசம் டஜன் கணக்கில் வைத்திருப்பதால் நான் தான் உங்கள் மருமகன் அக்கவுண்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லிட்டேன்.

அதனால் அப்பாவும் நான் சொன்னபடி மனோஜ்க்கு பணத்தை அனுப்பி வைத்துவிட்டார் என்று சொல்லி சமாளித்து விட்டார். உடனே மனோஜ் நான் இனி நினைத்தபடி பிசினஸ் பண்ணி ஜெயித்து விடுவேன் என்று சொல்கிறார். ஆனால் இந்த உண்மை எப்பொழுதும் முத்துவிற்கும் வீட்டில் உள்ளவர்க்கும் தெரியும் என்று தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் எல்லா தில்லாலங்கடி வேலையும் பார்த்த ரோகினி மட்டும் தப்பித்துக் கொண்டே வருகிறார்.

Trending News