Manjummal boys and Premalu: இப்ப வருகிற படங்களில் பெரிய படங்களை விட சின்ன பட்ஜெட்டில் புது ஹீரோக்கள் நடித்து வரும் படங்கள் தான் பார்க்கும் படியாக இருக்கிறது. அதற்கு காரணம் அவர்கள் வசூலை நோக்கி போகாமல் சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரையை பதிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் முதல் ஆர்டிஸ்ட்கள் வரை மெனக்கெடு செய்கிறார்கள்.
அதனால் சின்ன பட்ஜெட் படங்கள் ஆகா ஓகோ என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. முக்கியமாக மலையாள படங்கள் இங்கு இருக்கிற ரசிகர்களையும் கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம். அப்படி சமீபத்தில் வெளிவந்த மஞ்சுமால் பாய்ஸ் மற்றும் பிரேமலு படங்கள் வசூல் அளவில் சாதனை படைத்து விட்டது.
பெரிய பட்ஜெட் படத்தை கைப்பற்றிய நிறுவனம்
இந்த இரண்டு படங்களுமே டிஸ்ட்ரிபியூட் பண்ணியது கோகுலம் சிட்ஸ். இவர் தான் கோகுலம் கோபாலன் நிறுவனத்தின் உரிமையாளர்கள். முக்கியமாக கேரளாவில் மிகப்பெரிய டிஸ்ட்ரிபியூட்டர். அப்படிப்பட்ட இவர்கள் எந்த படத்தை தொட்டாலும் அது பொன்னாக தான் மாறிக் கொண்டு வருகிறது.
அப்படி மஞ்சுமால் பாய்ஸ் மற்றும் பிரேமலு படத்தை டிஸ்ட்ரிபியூட் பண்ணியதன் மூலம் கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்திருக்கிறது. தற்போது இவர் கையில் தான் இரண்டு ஜாம்பவான்களின் படமும் சிக்கியிருக்கிறது. அதாவது இந்த வருடத்தில் கமல் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 மற்றும் ரஜினி நடிப்பில் வேட்டையன் படத்தையும் இந்த நிறுவனம் தான் வாங்கி இருக்கிறது.
அந்த வகையில் கேரளாவில் இந்த இரண்டு படத்தையும் வெளியிடும் உரிமையை கைப்பற்றி இருக்கிறார். சும்மாவே இவர் எந்த படத்தை வாங்கினாலும் அந்த படம் பட்ஜெட்டை தாண்டி டபுள் மடங்கு லாபத்தை பார்க்காமல் விடாது. அதனால் இந்தியன் 2 மற்றும் வேட்டையன் கண்டிப்பாக இவர் மூலம் கேரளாவில் ஒரு சம்பவத்தை ஏற்படுத்தப் போகிறது.