ஓடிடிக்கு வரும் ஹாட்ஸ்பாட்.. தியேட்டர்ல பார்க்காதவங்க மிஸ் பண்ணிடாதீங்க

Hotspot-OTT: வித்தியாசமான கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பதுண்டு. அப்படி ஒரு கதை அம்சத்துடன் வெளிவந்த படம் தான் ஹாட்ஸ்பாட்.

நான்கு குறும்படங்கள் ஒன்றாக இணைந்த இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியான போதே ஒரு சலசலப்பு இருந்தது.

அதில் இடம்பெற்று இருந்த காட்சிகளும் வசனங்களும் நிச்சயம் சர்ச்சையாகும் என்று கூட பேசப்பட்டது. இப்படி ஒரு எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

ஓடிடிக்கு வரும் ஹாட்ஸ்பாட்

அதனாலேயே பட குழு சக்சஸ் மீட்டை நடத்தாமல் அனைவருக்கும் நன்றி சொல்லும் வகையில் தேங்க்ஸ் மீட் நடத்தி ஆச்சரியப்படுத்தினார்கள். இந்நிலையில் ஹாட்ஸ்பாட் ஓடிடிக்கு வருவதற்கு தயாராகிவிட்டது.

அதன்படி வரும் மே 3ம் தேதி டென்ட்கொட்டா தளத்தில் தான் இப்படம் வெளியாக இருக்கிறது. தியேட்டரை போலவே டிஜிட்டலிலும் இப்படம் நிச்சயம் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சிறப்பான கதை அம்சத்துடன் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொண்ட இப்படத்தை தியேட்டரில் பார்க்காதவர்கள் தற்போது தவற விட வேண்டாம். இதைத்தான் பட குழுவினரும் பேரார்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.