செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Baakiyalakshmi : சோணமுத்தா போச்சா! புள்ள இல்லாத வீட்டில் துள்ளி குதிக்கும் பழனிச்சாமி.. கோபிக்கு ஷாக் கொடுக்கும் பாக்யா

பாக்கியலட்சுமி தொடரில் எதிர்பார்த்ததை விட மிகவும் வேடிக்கையான விஷயங்கள் தான் அரங்கேறி கொண்டிருக்கிறது. புள்ள இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவான் என்ற பழமொழியை நாம் கேட்டிருக்கிறோம். அதே போல் தான் இருக்கிறது பழனிச்சாமியின் நிலைமை.

அதாவது பாக்யாவை இந்த வயதில் கரெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக விதவிதமாக கலர் கலராக உடை அணிந்து அவர் முன்பு செல்கிறார். ஆனால் பாக்யாவுக்கு ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததால் ஒரு மன குழப்பத்திலேயே இருக்கிறார்.

இதனால் பழனிச்சாமி என்ன உடை அணிந்திருக்கிறார் என்பது கூட அவருக்கு நினைவுக்கு வரவில்லை. பாக்யாவுக்காக இவ்வளவு பண்ணியும் பிரயோஜனம் இல்லையே, சோணமுத்தா போச்சா என்ற நிலைமையில் தான் பழனிச்சாமி இருக்கிறார்.

பாக்கியாவுக்காக பழனிச்சாமி பண்ணியது எல்லாம் வீணா போச்சு

ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஈஸ்வரி இடம் கோபியை சொல்ல சொல்கிறார். அப்போது கிச்சனில் பாக்யா மற்றும் செல்வி ஆகியோரும் இருக்கின்றனர். இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று தெரியாமல் மென்னு முழுங்குகிறார் கோபி.

மேலும் கோபியை வம்பு இழுக்கும் படி பாக்யாவும் ஏட்டிக்கு போட்டியாக பேசி ஷாக் கொடுக்கிறார். இதனால் பயந்து போன கோபி உங்ககிட்ட அப்புறம் பேசலாமா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். கோபியின் குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிய வந்தால் என்ன ஆகுமோ என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

இப்போது பாக்யாவுக்கு எந்த விஷயம் தெரிந்தும் மௌனம் காத்து வருகிறார். குறிப்பாக கோபியின் மகள் இனியா இந்த விஷயத்தை கேட்டால் மனம் உடைந்து போவார். ஈஸ்வரி இந்த விஷயத்தை அறிந்தவுடன் ராதிகா மீது கோபப்படுகிறாரா இல்லை தங்கம் தட்டில் வைத்து தாங்குகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News