சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Modhalum Kadhalum: ஒண்ணுமே தெரியாத மாதிரி ஓவர் ரியாக்ஷன் கொடுக்கும் விக்ரம்.. கால சுத்துற பாம்பாக பின்னாடியே போகும் வேதா

Modhalum Kadhalum Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மோதலும் காதலும் சீரியலில், வேதாவிற்கு குழந்தை பிறப்பதற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் சொன்னதிலிருந்து ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். முக்கியமாக வேதாவின் அம்மா சந்தோசத்தில் கோயில் நேர்த்திக்கடன் என்று பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்.

அத்துடன் வேதாவிற்கும் விக்ரம் மீது காதல் விருப்பம் வந்துவிட்டது. இதை எப்படியாவது விக்ரமிடம் சொல்ல வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் எதுவுமே தெரியாது போல் விக்ரம், வேதாவை ஒதுக்கி வைக்கிறார்.

பிறகு குடும்பத்தில் இருப்பவர்கள் நாமலே நேரடியாக களத்தில் இறங்கலாம் என்று வேதாவுக்கும் விக்ரமுக்கும் முதல் ராத்திரி ஏற்பாடு பண்ணுகிறார்கள். அதற்கான தோரணை எல்லாம் ரெடி பண்ணிவிட்டு விக்ரம் மற்றும் வேதாவை உள்ளே அனுப்புகிறார்கள். ஆனால் உள்ளே போய் பார்த்ததும் விக்ரமுக்கு ஒன்றுமே தெரியாத மாதிரி ஓவர் ரியாக்ஷன் கொடுக்கிறார்.

காதலை சொல்லப் போகும் வேதா

கடைசியில் வேதாவிற்கு வேறு வழியே இல்லை எப்படியாவது காதலை சொல்ல வேண்டும் என்ற முயற்சியில் மது பாட்டில் வாங்கி சர்ப்ரைஸ் பண்ணலாம் என்று மொட்டை மாடிக்கு போய்விட்டார். அங்கே இருந்து விக்ரமிற்கு ஃபோன் பண்ணி மாடிக்கு வர சொல்கிறார். மாடிக்கு போன விக்ரம் கையில் சரக்கு பாட்டிலை கொடுத்து காதலை ப்ரொபோஸ் பண்ணி விடலாம் என்று வேதா பிளான் பண்ணிவிட்டார்.

ஆனால் எப்படி சொல்வது என்று தயக்கத்துடனே இருக்கிறார். விக்ரம் இடமிருந்து உங்களுடைய கனவு கன்னி பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்கிறார். அதற்கு விக்ரமும் சில விஷயங்களை சொல்லி வருகிறார். இதை கேட்டதும் வேதா நீங்க சொல்வது படி வேண்டும் என்றால் ஜவுளி கடையில் இருக்கும் பொம்மையை தான் நீங்கள் கல்யாணம் பண்ணி இருக்கணும் என்று சொல்கிறார்.

பிறகு வேதாவின் மனசாட்சி வந்து விக்ரம் சொல்வதெல்லாம் உன்னைய தான் இது கூட உனக்கு புரியலையா? உடனே ஐ லவ் யூ சொல்லிரு என்று மனசாட்சி சொல்கிறது. இதை எப்படி வேதா விக்ரமிடம் சொல்ல போகிறார். விக்ரம் வேதாவை ஏற்றுக் கொள்வாரா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News