Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து, மனோஜ்க்கு திடீரென்று எப்படி ரோகினி அப்பா 15 லட்ச ரூபாயை அனுப்பி வைப்பார் என்ற சந்தேகத்துடன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கைரேகை பார்த்து சொல்றவர் முத்துவை பார்த்து நீங்கள் ஒரு மகராசன் போல வாழ்வீர்கள்.
நீங்கள் நினைத்தபடி உங்களுடைய வாழ்க்கை நன்றாக அமையும் என்று சொன்னார். ஆனால் இன்று ஒரு நாள் மட்டும் கொஞ்சம் எந்த வேலை செஞ்சாலும் யோசித்து கவனமாக செய்யுங்கள். ஏனென்றால் இன்றைய நாள் உங்களுக்கு ஒரு விபரீதம் ஏற்படக்கூடிய நாளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறிவிட்டார்.
ஆனால் முத்து இதை எல்லாம் நம்பாமல் வழக்கம்போல் சவாரிக்கு போய்விட்டார். அப்பொழுது எம்எல்ஏ முத்துக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர வைக்கிறார். உடனே அங்கே வந்த ஒருவருக்கு கார் வாங்க வேண்டும். அதற்கு நீ தான் கூட இருந்து எல்லா உதவியும் பண்ண வேண்டும் என்று முத்துவை கூட்டிட்டு கார் வாங்க போகிறார்கள்.
இதற்கு இடையில் மனோஜ் கையில் பணம் இருப்பதால் ஒரு காரை புக் பண்ணலாம் என்று அதே கார் ஷோரூம்-க்கு போயிருக்கிறார். ரோகினியும் வந்து இருவரும் சேர்ந்து ஒரு காரை பார்த்து பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி முத்து கூட்டிட்டு வந்த நபரும் அந்த கார் தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லிவிட்டார்.
முத்துக்கு ஏற்படப் போகும் சிக்கல்
உடனே முத்து அந்த நபர் யார் என்று சொல்லுங்கள் நான் அவரிடம் பேசிப் பார்க்கிறேன் என்று கேட்கிறார். பிறகு பார்த்தால் மனோஜ் தான் என்றதும் வழக்கம் போல் முத்து அவரை சீண்டி விட்டு காரே அந்த எம்எல்ஏவுக்கு வாங்கிக் கொடுத்து விடுகிறார். இதனால் எம்எல்ஏ ஓவர் சந்தோஷத்தில் முத்துவை கூட்டிட்டு பார்ட்டிக்கு போய்விட்டார்.
அங்கே சரக்கு வாங்கி கொடுத்து முத்துவை குடிக்க வைக்கிறார். இதற்கிடையில் மீனா, அம்மாவுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது சத்தியா அந்த லோக்கல் ரவுடியுடன் கோவிலுக்கு வருகிறார். இதை பார்த்ததும் மீனா வழக்கம்போல் அந்த ரவுடியை வாய்க்கு வந்தபடி திட்டி விடுகிறார்.
இந்த கோபத்தில் இருந்த அந்த ரவுடி முத்து குடிக்கும் அந்த இடத்தில் இருப்பதால் இதை வைத்து முத்துக்கும் மீனாக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி விடலாம் என்று பிளான் பண்ணிவிட்டார். அந்த வகையில் முத்து குடிக்கும் பொழுது அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப் போகிறார்.
இதை வைத்து ஒரு குடிகாரன் வண்டி ஓட்டி பிரச்சனை ஆகிவிட்டது போல் அந்த ரவுடி முத்துவை சிக்க வைக்க போகிறார். இதனை பார்த்த ரோகினி மற்றும் மனோஜ் உச்சகட்ட சந்தோஷத்தில் துள்ளி குதிக்கப் போகிறார்கள். ஏற்கனவே எப்பொழுது முத்துவை கவுக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஒரு விஷயம் அவர்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் அமையப் போகிறது.