Dhanush: யானை தன் தலையிலேயே மண்ண வாரி போடும்னு சொல்லுவாங்க. அது நடிகர் தனுஷோட நெருங்கிய நண்பர் ஒருவருக்குத்தான் சரியான பொருத்தமாக இருக்கிறது. சினிமாவை பொறுத்த வரைக்கும் சில நேரங்களில் விபரீத ஆசையை தூண்டி விடுபவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
அதுக்கெல்லாம் காது கொடுக்காமல் இருந்தால் தான் பிழைக்க முடியும். நல்ல நடிச்சுக்கிட்டு இருந்தவங்க திடீரென்று தயாரிப்பாளராகி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிற இடம் காணாமல் போயிடுவாங்க. அதே மாதிரி காமெடியனா இருக்கிறவங்கள நீங்க ஏன் ஹீரோவாக கூடாது என்று ஏற்றிவிட்டு அவங்க மார்க்கெட்டையே போக வைத்து விடுவார்கள்.
இப்படி பேசுபவர்களின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தமிழ் சினிமாவில் கெட்டுப் போனவர்களுக்கு உதாரணமாக நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போதைக்கு தமிழ் சினிமா உலகின் இசை அமைப்பாளர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் அனிருத்.
குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி தான். கண்டிப்பாக பாராட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால் இவர் எந்த கேப்பில் மேலே வந்தார் என்று யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக தெரியும். ஜி வி பிரகாஷ் இசையை மறந்து நடிப்பில் எப்ப கவனம் செலுத்த ஆரம்பித்தாரோ அந்த சமயம் தான் அனிருத் இசை உலகை பிடித்தது.
உண்மையை சொல்லப்போனால் அனிருத் மாதிரி உச்சகட்ட இசை அமைப்பாளராக மாறி இருக்க வேண்டியவர் ஜிவி பிரகாஷ். வெயில், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், அசுரன் இந்த படங்களின் மியூசிக்கை எல்லாம் இப்போது கேட்கும் போது கூட நேராகவே ஜீவி பிரகாஷ் வீட்டுக்கு போய், சார் தயவு செய்து மீண்டும் இசை துறைக்கு வந்து விடுங்க என சொல்லலாம் போல தான் இருக்கிறது.
ஜிவி பிரகாஷுக்கு இசை கை கொடுத்த அளவுக்கு நடிப்பு கை கொடுக்கவில்லை. எப்படியாவது ஹீரோவாக ஜெயித்து விடலாம் என்ற ஆசையில் கெடச்ச படத்தில் எல்லாம் நடிப்பது, சம்பளம் இல்லாமல் நடிப்பது என தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு விட்டார்.
அது மட்டும் இல்லாமல் அடல்ட் கன்டென்ட் படங்கள் வேற. இதற்கு இடையில் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை வேற இல்லாமல் போனது. வெற்றிமாறனின் வற்புறுத்தலின் பேரில் அசுரன் படத்தில் இருவரும் இணைந்தார்கள்.
அதன் பிறகு இருவருடைய நட்பும் மீண்டும் துளிர்விட்டு இருக்கிறது. ஜிவி பிரகாஷிடம் பேச ஆரம்பித்ததும் தனுஷ் சொன்ன முதல் விஷயம் மீண்டும் இசையமைக்க ஆரம்பித்துவிடு என்றுதான். படங்களின் நடித்ததெல்லாம் போதும் உனக்கு எது வருகிறதோ அதை சரியாக செய் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் இது பற்றி யோசித்து நல்லதொரு முடிவை எடுத்திருக்கிறார். கொஞ்ச காலத்திற்கு நடிப்பில் இருந்து ஒதுங்கி விட்டு மியூசிக்கில் கவனம் செலுத்த இருக்கிறார்.