சில பிரபலங்கள் புகழின் உச்சியில் இருக்கும் போது திடீர் அவர்களுடைய மரணம் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவ்வாறு நடிகை சில்க் ஸ்மிதா, பாடகி சுவர்ணலதா போன்றோரின் இறப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
அவ்வாறு தான் ரஜினி பட நடிகை ஒருவர் முன்னணி இடத்தில் இருந்த போது ஒரு விபத்தின் காரணமாக உயிரிழந்து விட்டார். இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகி இருக்கிறது.
முதல் திருமண நாளை கொண்டாட பத்து நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் இறந்துவிட்டார். அவர் யாருமில்லை ரஜினியின் படையப்பா படத்தில் நடித்த சௌந்தர்யா தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகை.
சௌந்தர்யாவின் திருமண புகைப்படம்
கர்நாடகா ஸ்டேட் அவார்டு, ஃபிலிம் ஃபேர், நேஷனல் அவார்ட் என பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார். ரஜினி, கமல், விஜயகாந்த் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரகு சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் 2004 ஆம் ஆண்டு 17ஆம் தேதி பெங்களூரில் இருந்து கரீம் நகருக்கு விமானம் மூலம் சௌந்தர்யா சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக விமானம் வெடித்து சிதறியது.
அதில் சௌந்தர்யாவின் சகோதரரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்த பல உயிர்களை காவு வாங்கியது. தற்போது சௌந்தர்யாவின் திருமண புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.