Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனிடம் போட்ட சவாலில் ஜெய்ப்பதற்கு நான்கு மருமகள்கள் அலைய ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் நந்தினிக்கு மசாலா பொடி தயாரிக்கும் பிசினஸ் ஆரம்பித்து கொடுத்து பிள்ளையார் சுழி போடலாம் என்று ஜனனி முடிவெடுத்து விட்டார்.
அதற்காக பேங்கில் லோன் கேட்கப் போகும் பொழுது மேனேஜர் செக்யூரிட்டி கையெழுத்து போடுவதற்கு யாராவது முக்கிய நபர் வேண்டும் என்று கூறிவிட்டார். அப்பொழுது ஜனனி, சாருபாலாவிற்கு போன் பண்ணி பேசிய பொழுது அவர் வியாபார ரீதியாக வெளியூரில் இருப்பதாக சொல்லிவிடுகிறார்.
அந்த நேரத்தில் பேங்க் மேனேஜர் நீங்கள் குணசேகரன் வீட்டு பெண்கள் தானே. அதனால் அவர் நேரடியாக வந்து கையெழுத்து போட்டாலே போதும் பணம் நீங்கள் கேட்டபடி கிடைத்துவிடும் என்று சொல்கிறார். உடனே நந்தினி அப்படி ஒரு பணம் எனக்கு தேவையில்லை என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு இதைப் பற்றி பொறுமையாக யோசித்து முடிவு எடுக்கலாம் என்று அனைவரும் டீ சாப்பிடுவதற்கு கிளம்பி விடுகிறார்கள்.
ஈஸ்வரி எடுத்த முடிவு
இதனை தொடர்ந்து ஞானம் பிசினஸ் பண்ணுவதற்காக தேடி போன நபர் கரிகாலன். KK என்ற பெயர் வைத்து கருவாட்டு கரிகாலன் என்று அனைத்து பக்கமும் பிரான்ச் வைத்து ஓஹோ என்று வளர்ந்து வந்ததாக காட்டப்படுகிறது. ஆரம்பத்தில் கரிகாலன் உடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவெடுத்த ஞானத்திற்கு பணத்த ஆசையால் மறுபடியும் கரிகாலனை தேடி போய்விட்டார்.
அந்த வகையில் கரிகாலன் கேட்டபடி பணத்தை முழுவதும் ஞானம் தாரவாத்து கொடுத்து விட்டார். கண்டிப்பாக கரிகாலன் ஞானத்தை ஏமாற்ற தான் போகிறார். ஆனால் இதற்குப் பின்னணியில் இருந்து கரிகாலனை தூண்டி விடுவது குணசேகரனின் பிளான் ஆகத்தான் இருக்கும். கமுக்கமாக இருந்து குணசேகரன் தம்பிகள் ஒவ்வொருவரையும் கவிழ்க்க போகிறார்.
இதனை அடுத்து ஈஸ்வரி, ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதாவது இனி குணசேகரனுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதனால் நான் சட்டப்படி விவாகரத்து பெறப் போகிறேன் என்று சொல்கிறார். அந்த வகையில் கோலங்கள் நாடகத்தில் எப்படி தேவயானி, அபி என்ற கேரக்டரில் நடித்து கணவரை பிரிந்து தொல்காப்பியன் உதவியுடன் சாதித்துக் காட்டினாரோ, அதே மாதிரி தற்போது ஈஸ்வரி மாறிவிட்டார்.
ஆனால் இந்த முடிவு எப்பவோ எடுத்திருக்க வேண்டியது. இப்பதான் ஈஸ்வரிக்கு மூளை வேலை செய்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ரேணுகா பரதநாட்டியம் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கப் போகிறார். இப்படி பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய முயற்ச்சியை நோக்கி போகும் போது அதற்கு தடை கற்களாக குணசேகரன் பல வழிகளில் சதி செய்து கெடுக்கப் போகிறார்.
அந்த வகையில் பல போராட்டங்களை தாண்டி கடைசியில் குணசேகரன் வீட்டு பெண்கள் ஜெயித்து காட்டப் போகிறார்கள்.