Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஞானம் இனி நான் யாருக்கும் அடங்கத் தேவையில்லை.. அடிபணியவும் மாட்டேன் என்று வீர வசனம் பேசி முட்டாள்தனமான வேலையை பார்த்து வருகிறார். அதாவது ரேணுகா அம்மா கொடுத்த பணத்தை வைத்து பிசினஸ் பண்ண போகிறேன் என்று முடிவு எடுத்தது வரை சரிதான்.
ஆனால் அதை வீட்டில் இருப்பவர்களிடம் எந்தவித கலந்தாய்வும் பண்ணாமல் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று கிடைத்த பணத்தை கரிகாலனிடம் வாரி இறைத்து விட்டார். கரிகாலன் பற்றி தெரிந்தும் இந்த அளவிற்கு புத்தி கெட்டுப் போய் பணத்தை கொடுத்த ஞான சூனியமாகத்தான் ஞானம் இருக்கிறார்.
கரிகாலன் என்ன சொன்னாலும் அதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு வீட்டில் வந்து கெத்தாக நாளைக்கு கடை திறப்பு விழா இருக்கிறது என்று ஓவர் அலப்பறையை கூட்டி வருகிறார். இதை தட்டி கேட்ட ரேணுகாவை வாயை மூடும் அளவிற்கு சம்பந்தமே இல்லாமல் பேசி அடக்கி விட்டார்.
நிற்கதியாக நிற்கப்போகும் ஞானம்
சரி இனி இந்த மனுசனிடம் ஒன்னும் பேச முடியாது என்று ரேணுகாவும் வாயை மூடிவிட்டார். தற்போது கடை திறப்பு விழாவிற்கு சீப் கெஸ்ட் ஆக சீரியல் நடிகையை வைத்து ஆரம்பிக்கலாம் என்று கரிகாலன் சொன்னபடி ஞானம் தலையாட்டி விட்டார். அதற்காக பேனர் அடிக்கும் பொழுது அந்த நடிகையுடன் ஞானம் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் வெளிவந்தது.
இதை பார்த்ததும் ரேணுகா வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். ஆனால் ஞானம், ரேணுகாவை அடக்கி விட்டார். பிறகு பங்க்ஷன்க்கு தேவையான விஷயங்களை ஒவ்வொன்றாக நந்தினி பண்ணி கொண்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த விஷயத்தை குணசேகரன் மற்றும் அம்மாவிடம் சொல்லலாம் என்று கதை சொல்கிறார்.
அதற்கு அவரிடம் ஏன் சொல்ல வேண்டும் என்று நந்தினி மற்றும் ரேணுகா எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இவர்கள் கூப்பிட்டால் கூட குணசேகரன் போகப் போவதில்லை. ஏன் என்றால் கரிகாலன் மூலமாக இந்த மாதிரியான காய் நகரத்தி ஞானத்தை கவுப்பதற்கு பின்னணியில் இருந்து அனைத்து சதி வேலைகளையும் செய்கிறது குணசேகரன் தான்.
அப்படி இருக்கும் பொழுது குணசேகரன் நஷ்டப்பட்டு நிற்கதியாக நிற்கும் பொழுது தான் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என்று குணசேகரன் ஒரு பிளான் பண்ணி விட்டார். கடைசியில் ஞானம் எடுத்த ஒரு முடிவால் அனைவரும் தோற்றுப் போய் நிற்கப் போகிறார்கள். பிறகு வழக்கம் போல் ஞானம் என்னால் ஒன்னும் பண்ண முடியாது என்று குணசேகரன் கூடவே சாய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதனை தொடர்ந்து நந்தினி அவருடைய பிசினஸை பண்ணுவதற்கு முதலீடு வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். இதற்கு சப்போர்ட்டாக இவருடைய அப்பா மொய் விருந்து நிகழ்ச்சியை வைத்து அதன் மூலம் பணத்தை தருகிறேன் என்று ஒரு ஏற்பாடு பண்ண நினைக்கிறார். ஆனால் குணசேகரன் சொன்னபடி எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
ஆக மொத்தத்தில் எந்த ஒரு விஷயமும் எளிதாக கிடைக்கப் போவதில்லை என்பதன் நிரூபித்துக் காட்டும் விதமாக நிஜத்திலும் இந்த மாதிரி ஒரு போராட்டங்களை தாண்டி தான் வரவேண்டும் என்பதற்கு உதாரணமாக கதை நகர்ந்து வருகிறது.