Rajini Biopic Movie: சினிமா திரையுலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஹீரோவாக பயணித்து வரும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான். ஆறு வயது முதல் 60 வரை இவர் நடித்த படம் மட்டும் இல்லை நிஜத்திலும் ஆறு வயது குழந்தையை முதல் 60 வயது தாத்தாக்கள் வரை இவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் சும்மா பெயருக்கு நடிக்க வேண்டும் என்று இல்லாமல் வசூல் அளவிலும் லாபத்தை கொடுக்கும் அளவிற்கு ஆட்டநாயகனாக ஜொலித்துக் கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட இவருடைய பயோபிக் படம் தற்போது ரெடியாகப் போகிறது.
ரஜினியின் பயோபிக் படத்தை எடுக்கப் போவது பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சஜித் நதியாத்வாலா. இவர் பாலிவுட்டில் கிக், ஹவுஸ்புல், பாகி மற்றும் 83 போன்ற பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவர் ரஜினியின் சிறந்த நண்பராகவும் உள்ளார்.
ரஜினியின் பயோபிக் படத்தை மிஸ் பண்ணிய தனுஷ்
அப்படிப்பட்ட இவர் தான் ரஜினியின் பயோபிக் கதையை எடுப்பதற்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வைத்திருக்கிறார். அந்த கதையை ரஜினியிடமும் காட்டியிருக்கிறார். ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தையும் பார்த்த பிறகு ரஜினி சூப்பர் என்று பாராட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இதில் நடிக்கப் போகும் ஆர்டிஸ்ட்களை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பம் ஆகிவிட்டது.
அந்த வகையில் எதிர்பார்க்கக் கூடிய சில ஹீரோக்களின் பெயர் அடிபட்டு வருகிறது. இதைப்பற்றி ஏற்கனவே தனுஷ் கூறியது என்னுடைய வாழ்க்கையில் இரண்டு ஜாம்பவான்களின் பயோபிக் கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா பயோபிக் நடித்துக் கொண்டு வருகிறார்.
இதனை அடுத்து ரஜினி பயோபிக் கதையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம் இவர்களுக்கு இடையே இருக்கும் மனக்கசப்பு தான். இவரை தொடர்ந்து சில ஹீரோக்களின் பெயர் அடிபட்டு வருகிறது.
அந்த வகையில் ரஜினியை அப்படியே காப்பி பண்ணும் அளவிற்கு இருக்கும் ஹீரோ சிவகார்த்திகேயன் தான். இவர் ரஜினியை பார்த்து வளர்ந்து வந்திருக்கிறார். அவருடைய தீவிர ரசிகர் என்று பலமுறை கூறியிருக்கிறார்.
அதனால் இவருக்கு ஒரு வாய்ப்பு இருந்தாலும் இருக்கலாம். இவருக்கு அடுத்தபடியாக கவின் பெயரும் அடிபட்டு வருகிறது. ஆனால் எந்த ஹீரோ நடிக்க போகிறார் என்ற விஷயம் மட்டும் கொஞ்ச நாளைக்கு சீக்ரெட் ஆகவே இருக்கும் என்று குறிப்பிடத்தக்கது.