சுந்தர் சி ரீமேக் செய்ய ஆசைப்பட்டு லோகேஷ் தட்டிய மலையாள சூப்பர் ஹிட் படம்.. எலியும் பூனையுமாய் அடித்துக் கொள்ளும் பிருத்திவி!

Sundar C wants to remake Malayalam super hit film but Lokesh may be do it: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர்சி அவர்கள் காமெடி மற்றும் திரில்லர் படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4  குடும்பங்கள் கொண்டாடும் படமாக வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

சுந்தர்சி ரீமேக் செய்ய நினைத்த மலையாள படம்

அரண்மனை ரிலீசுக்கு பின் சமீபத்திய  பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர்சி தன்னுடைய திரை அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்து வந்தார்.

அப்போது நிருபர், “நீங்கள் ஆசைப்பட்டு ரீமேக் செய்ய  நினைத்து, தமிழில் பண்ண முடியாத மலையாள படம் எதுவும் இருக்கிறதா?” என்ற கேள்விக்கு,  சட்டென பிருத்விராஜ் நடித்த “அய்யப்பனும் கோசியும்” படம் என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய சுந்தர்சி, அய்யப்பனும் கோசியும் திரைப்படம் பிடித்ததாகவும்,  அதே ரீமேக் செய்யும் நோக்கத்தோடு இத்திரைப்படத்தின் உரிமையை வாங்கி வைத்திருந்த ப்ரொடியூசரை அணுகியதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி அந்த ப்ரொடியூசர், வேறு ஒருவரை வைத்து திரைப்படத்தை பண்ண உள்ளதாக சுந்தர்சி இடம் கூறிவிட்டாராம். 

அதே புரொடியூசர் சில நாட்கள் கழித்து சுந்தர்சியை அணுகி, அய்யப்பனும் கோசியும் படத்தை ரீமேக் செய்யலாமா என்று கூற, இவர் முடியாது என்று மறுத்து விட்டாராம்.

சினிமா என்பது சாப்பாடு மாதிரி, சூடா இருக்கும்போது சாப்பிட்டால் தான் நல்லா இருக்கும், ஒரு மூடு வரும் போது அந்த படத்தை பண்ணி முடித்துவிடவேண்டும்.

இல்லாவிடில் மீண்டும் அத பண்ணனும்னு தோணாது என்பது போல் விளக்கம் அளித்து, இதை ரீமேக் செய்வதை கைவிட்டு விட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த அய்யப்பனும் கோசியும் சிறந்த திரைப்படமாக பல பிரிவுகளில் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

பிருத்திவிராஜ் மற்றும் பிஜுமேனன் நடிப்பில் அட்டகாசமான திரைக்கதையுடன் வெளிவந்த அய்யப்பனும் கோசியும் வசூலிலும் பல மடங்கு லாபத்தை சம்பாதித்தது.

இதை ரீமேக் செய்யும் தமிழ் உரிமையை  தனுஷ் நடித்த ஆடுகளம் பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கி வைத்திருந்தார்.

இதில் நடிக்க கார்த்தி மற்றும் பார்த்திபன், சசிகுமார் மற்றும் ஆர்யா போன்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கபட்டது. சுந்தர் சி தவறவிட்டதை லோகேஷ் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.